தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ் பெற்ற நடிகராக இருந்தவர் எம்.ஜி.ஆர். மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் எம்ஜிஆர். அரசியலிலும் சினிமாவிலும் தனக்கான தனி பாதையை உருவாக்கி சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தவர் எம்ஜிஆர்.

குடும்ப வறுமைக்காக நாடகங்களில் நடிக்க வந்தார் எம்ஜிஆர். பின்னர் அதன் மூலம் சினிமாவில் அவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தானக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய எம்.ஜி.ஆர் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தார். எம்ஜிஆர் படங்கள் என்றாலே சமூக நீதி கருத்துக்கள் திராவிட சிந்தனைகள் ஆக்சன் காட்சிகள் நிறைந்திருக்கும். அதனால் மக்கள் இவரை வெகுவாக ரசித்தனர்.
தான்னை வெற்றி நாயகனாக மாற்றிய தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பி எம்ஜிஆர் அரசியலில் களம் இறங்கி தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக தான் இறக்கும் வரையிலும் சிறப்பாக ஆட்சி நடத்தியவர் எம்ஜிஆர். இவைருக்கு இருந்தவர்கள் எல்லாம் ரசிகர்கள் அல்ல பக்தர்கள் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அவர் மீது அதிக அன்பு வைத்திருந்தனர் மக்கள். அதற்கு சான்றாக ஒரு சம்பவம் இருக்கிறது.
எம்ஜிஆரும் பானுமதியும் நடித்து வெளியான திரைப்படம் மதுரவீரன். இந்த திரைப்படத்தை முதலில் இயக்கியது டிஆர் ரகுநாத் அவர்கள் தான். டி ஆர் ரகுநாத் எம்ஜிஆர் சினிமாவுக்கு வந்த காலத்தில் இருந்தே தெரிந்தவர் என்பதால் எம்ஜிஆரை வாடா போடா என்று தான் ஷூட்டிங் ஸ்பாட்டில் கூப்பிடுவார். அப்படி ஒரு நாள் ரசிகர்கள் வந்திருக்கும் போது ராமச்சந்திரா வாடா சூட்டிங்க்கு டைம் ஆச்சு என்று கூறி இருக்கிறார். அதைக் கேட்டு கோபப்பட்ட எம்ஜிஆரின் ரசிகர்கள் யார் இவர் உங்களை போய் வாடா போடா என்று சொல்லுவது அவர் வெளியே வரட்டும் நாங்கள் கல்லால் அவர் மண்டையை உடைத்து விடுகிறோம் என்று மிரட்டி இருக்கின்றனர்.

உடனே எம்ஜிஆர் அதெல்லாம் செஞ்சுராதீங்க அவர் எனக்கு குரு போன்றவர் மற்றும் நண்பர் போன்றவர். ஆரம்பத்தில் இருந்தே என்னை தெரியும் என்பதால் என்னை உரிமையுடன் வாடா போடா என்று கூப்பிடுகிறார் என்று எம்ஜிஆர் கூறியிருக்கிறார். மறுநாள் அந்த இயக்குனர் டி ஆர் ரகுநாத்திடம் அண்னே போது இடங்களில் என்னை வாடா போடா என்று சொல்லாதீங்க அண்ணா ரசிகர்கள் கோபப்படுகிறார்கள். தெரிந்தோ தெரியாமலோ என் மீது ரசிகர்கள் இவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால் டி ஆர் ரகுநாதோ என்னால் உன்னை வாடா போடா என்று கூப்பிடும் பழக்கத்தை மாற்ற முடியவில்லை அதனால் படத்தில் இருந்து விலகுகிறேன் என்று கூறியிருக்கிறார். அதற்கு பிறகு தான் யோகாநாத் இந்த படத்தை எடுத்து முடித்திருக்கிறார்.
