என்னதான் பிரிஎண்ட்ஸ்-ஆ இருந்தாலும் அதுக்குன்னு இப்படியா? நீச்சல் குளத்தில் குத்தாட்டம் அன்ஷிதா, ஜெப்ரி, RJஅனந்தி.. வீடியோ..

By Soundarya on தை 2, 2025

Spread the love

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் 6 வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர். மொத்தம் இந்த நிகழ்ச்சியில் 24 போட்டியாளர்கள் போட்டி போட்ட நிலையில் அதில் 14 போட்டியாளர்கள் எவிக்ஷன் ஆகி வெளியேற்றப்பட்டுள்ளன.

   

இன்னும் பத்து போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். தற்போது பினாலே டாஸ்க் நடந்து கொண்டிருப்பதால் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.  நிகழ்ச்சி முடிவதற்கு இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ளதால் போட்டியாளர்கள் பயங்கரமாக விளையாடி வருகிறார்கள். தற்போது டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெற்றுள்ளது. இதனால் போட்டியாளர்கள் வெறித்தனமாக விளையாடி வருகிறார்கள்.

   

 

கடந்த வாரம் ஜெஃப்ரி மற்றும் அன்சிதா ஆகிய இருவரும் வீட்டை விட்டு வெளியேறினார்கள். தற்போது வீட்டுக்குள் பத்து போட்டியாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள். இதில் இந்த வாரத்திற்கு ராணுவ்,  விஷால் பவித்ரா, அருண், தீபக், மஞ்சரி, ராயன், ஜாக்குலின் நாமினேட் செய்யப்பட்டுள்ளார்கள் சௌந்தர்யா மற்றும் முத்துக்குமரன் மட்டும் எஸ்கேப் ஆகியுள்ளனர். போட்டியாளர்கள் பயங்கரமாக தங்களுடைய விளையாட்டை விளையாடி வருகிறார்கள்.

இதற்கிடையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து சாச்சனா, அன்ஷிதா, ஜெபிரி, ரஞ்சித், ஆனந்தி, சத்யா, தர்ஷிகா, ரவீந்தர் உள்ளிட்டோர் எலிமினேட் ஆகியுள்ளார்கள். இந்நிலையில் நேற்று புத்தாண்டை முன்னிட்டு அன்ஷிதா, ஜெப்பிரி, சத்யா, ஆனந்தி ஆகியோர் நீச்சல் குளத்தில் செம ஜாலியாக புத்தாண்டை கொண்டாடியுள்ளார்கள். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.