தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் மாதவன். மணிரத்தினம் இயக்கிய அலைபாயுதே என்ற திரைப்படம் தான் மாதவனுக்கு மிகப்பெரிய புகழையும் பெயரையும் பெற்றுக் கொடுத்தது. அதன் பிறகு தமிழில் வித்தியாசமான கதை அம்சம் கொண்ட திரைப்படங்களை மாதவன் தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் ஒரு இயக்குனராகவும் தன்னுடைய திறமையை நிரூபித்து காட்டியுள்ளார். அதாவது கடந்த 2022 ஆம் ஆண்டு ரிலீசான ராக்கெட்டரி திரைப்படம் மூலம் மாதவன் இயக்குனராகவும் அறிமுகமானார். தான் இயக்கிய முதல் படமே வெற்றி அடைந்தது மட்டுமல்லாமல் அவருக்கு மிகப்பெரிய தேசிய விருதையும் பெற்று தந்தது.
தற்போது அதிர்ஷ்டசாலி என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது தவிர டெஸ்ட் என்ற தமிழ் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மாதவனுக்கு ஜோடியாக குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் நயன்தாராவுக்கும் மாதவனுக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அண்மையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக துபாய் வந்திருந்த நயன்தாராவை தன்னுடைய படகுக்கு மாதவன் அழைத்துச் சென்று இருந்தார்.
துபாயில் சொந்தமாக படகு ஒன்றை மாதவன் வாங்கியுள்ள நிலையில் அந்த படகில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சில நாட்களுக்கு முன்பு ஜோடியாக பயணம் செய்திருந்தனர். அப்போது மாதவனுடன் ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்தனர். இப்படியான நிலையில் துபாயில் மாதவன் வாங்கியுள்ள சொகுசு படத்தின் விலை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது 40 அடி நீளம் கொண்ட இந்த சொகுசு படத்தின் விலை சுமார் 14 கோடி என கூறப்படுகிறது.
அதிநவீன வசதிகளுடன் கூடிய இந்த படகை தான் ஓய்வு எடுப்பதற்காகவும் ஏதேனும் ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் இருந்தால் அதனை அங்கு மேற்கொண்டும் வருகின்றார் மாதவன். அதுமட்டுமல்லாமல் இந்த படகை இயக்குவதற்கான லைசன்சையும் மாதவன் வாங்கியுள்ளார். இதற்காக ஆறு மாதம் பயிற்சி பெற்று அவர் லைசென்ஸ் வாங்கியுள்ளார். தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…