திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில் கூறியிருப்பதாவது, மார்கழி மாதம் வருகிற 16ம் தேதி தொடங்கி ஜனவரி 17ம் தேதி நிறைவடைகிறது. மார்கழி மாதத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 3:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் 4:45 மணியிலிருந்து 5 மணிக்குள் உதய மார்த்தாண்ட தீபாரதனை காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி தீபாராதனை நடைபெற உள்ளது.
காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் காலசந்தி தீபாராதனை 7:30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம் 8:45 மணியிலிருந்து 9 மணிக்குள் உச்சிக்கால தீபாராதனை, மாலை 3:30 மணிக்கு சாயரட்சை தீபாரதனை நடைபெற உள்ளது. மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகம் 7 மணிக்கு ராக்கால தீபாராதனை இரவு 7:30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை 8 மணி முதல் 8:30 மணிக்குள் பள்ளியறை தீபாராதனை மற்றும் நடை திருக்காபிடல் நடைபெற உள்ளது.
வருகிற 17ம் தேதி மற்றும் ஜனவரி 1ம் தேதி மற்றும் 6ம் தேதி ஆகிய 2 நாட்களும் பிரதோஷம் என்பதால் பகல் 2:30 மணிக்கு அபிஷேகம் நடைபெறும். மார்கழி 17ம் தேதி ஜனவரி 1ம் தேதி ஆங்கில வருட பிறப்பு என்பதால் அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. மார்கழி 19ம் தேதி அதாவது ஜனவரி 3ம் தேதி ஆருத்ரா தரிசனம் என்பதால் அன்று அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்படுகிறது மற்ற கால பூஜைகள் வழக்கம்போல நடைபெறும் என்று அந்த அறிவிப்பில் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…
சமூக வலைத்தளமான X தளத்தில் அலுவலகம் ஒன்றின் விசித்திரமான அறிவிப்பு ஒன்று வெளியாகி, தற்பொழுது பெரும் வைரலாகி வருகிறது. அந்த…
சீனாவின் நான்செங் நகரில் வானில் பாராகிளைடிங் செய்துகொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென வீசிய பலத்த காற்றினால் தனது கட்டுப்பாட்டை இழந்தார்.…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. செல்வபெருந்தகை, தனது பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்து அகில இந்திய காங்கிரஸ்…
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான சேரனுக்கும் பார்த்திபனுக்கும் இடையே கடந்த 28 ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தை இல்லை என்ற தகவல், சேரன்…