“அன்று வீரவசனம்.. இன்று பதுங்குவதா..?” – விஜய்யின் பழைய அறிக்கையைத் தூசு தட்டி திமுக ஐடி விங் அட்டாக்…! சட்டப்பேரவையில் வெடித்த புதிய சர்ச்சை…!

Spread the love

தமிழக சட்டப்பேரவையின் புதிய கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றி கழக அரசின் சமூக நீதி சர்வே குறித்த அறிவிப்பு பெரும் அரசியல் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு முடிந்த பின்னரே தமிழகத்தில் சமூக நீதி சர்வே நடத்தப்படும் என்ற அரசின் நிலைப்பாட்டை, எதிர்க்கட்சியான திமுகவின் ஐடி விங் கடுமையாக விமர்சித்துள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மாநில அரசே இந்த ஆய்வை நடத்த வேண்டும் என்று வீரவசனம் பேசிய விஜய், தற்போது ஆட்சிப் பொறுப்பேற்ற பின் மத்திய அரசின் பின்னால் பதுங்குவதாக அவர்கள் சாடியுள்ளனர்.

திமுக ஐடி விங் தனது எக்ஸ் பக்கத்தில், தவெக தலைவர் விஜய்யின் பழைய அறிக்கையை மேற்கோள் காட்டி தற்போதைய அரசின் போக்கை “இரட்டை வேடம்” மற்றும் “பச்சோந்தித்தனம்” என்று விமர்சித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் விஜய் வெளியிட்ட அறிக்கையில், சாதிவாரி கணக்கெடுப்புக்கு முன்னோட்டமாக ‘Caste Survey’ என்ற ஆய்வை நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லையா என்றும், அப்போதைய ஆட்சியாளர்கள் இதில் மெத்தனம் காட்டுவதாகவும் கேள்வி எழுப்பியிருந்தார். அன்று மற்ற மாநிலங்களை ஒப்பிட்டுப் பேசியவர், இன்று அதே போன்றதொரு நிலையைத் தன் ஆட்சியில் எடுப்பது ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளன.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜூன் 19 மற்றும் அடுத்த வார திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற உள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். இந்த மூன்று நாள் விவாதத்தின் போது, சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் சட்டமன்றத்தில் எதிரொலிக்கும் என்றும், தவெக அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையான முட்டுக்கட்டைகளையும் கேள்விகளையும் எழுப்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Swetha

Recent Posts

“நான் ஆறுதலா இருப்பேன்…” நகை கடை அதிபரின் மகளுடன் நட்பு… மீண்டும் வந்த கணவர் கேட்ட ஒற்றை கேள்வி… போலீஸ் ஸ்டேஷனில் அழுது புலம்பிய பெண்…. பகீர் சம்பவம்…!!

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர், குடும்பத் தகராறு காரணமாகத் தனது கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். பாரிமுனையில்…

6 minutes ago

ஐயோ… இஸ்ரேல் தாக்கிய கட்டிடம்… திடீரென இடிந்து 5 குழந்தைகள் உட்பட… 20 பேர் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கிய பகீர் சோகம்…!!

காசா நகரத்தின் தல் அல்-ஹவா பகுதியில், இஸ்ரேலின் முந்தைய வான்வழித் தாக்குதல்களால் கடுமையாகச் சேதமடைந்திருந்த ஆறு மாடி குடியிருப்பு கட்டிடம்…

7 minutes ago

“‘என் மகனை உண்மையா காதலிச்சா செத்து போடி…” 17 வயது பள்ளி மாணவியை மிரட்டி தற்கொலைக்கு தூண்டிய கொடூர தாய்… வீட்டில் சிக்கிய CCTV ஆதாரம்…. பகீர் பின்னணி…!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்க்கேஜ் பகுதியில், 17 வயது பிளஸ் 2 பள்ளி மாணவி ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டிய குற்றத்திற்காக…

14 minutes ago

ஐயோ கொடுமையே… பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் புகுந்து… முன்னாள் ராணுவ வீரர், மகள் வெட்டிக்கொலை… சொத்துத் தகராறில் உறவினர்கள் வெறிச்செயல்… நடுங்க வைக்கும் சம்பவம்…!

கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் புகுந்த உறவினர்கள் சிலர், 67 வயதான முன்னாள் ராணுவ…

20 minutes ago

விநாயகர் சதுர்த்தி விழாவில் சோகம்…! சிலையை கரைக்க சென்ற 6 மாணவர்கள் அடுத்தடுத்து நீரில் மூழ்கி பலி…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள பட்டாஞ்செரு பகுதியில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலையை நீரில் கரைக்க செய்யச்…

20 minutes ago

திக் திக்… குழந்தையைத் தோளில் சுமந்த… நபர் மீது விழுந்த ராட்சத பாம்பு… அருவியில் உரைய வைக்கும் அதிர்ச்சி வீடியோ… மகாராஷ்டிராவில் அரங்கேறிய சம்பவம்…!

மகாராஷ்டிர மாநிலத்தின் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அம்போலி அருவியில் சுற்றுலா சென்ற குடும்பத்தினருக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது. தனது…

24 minutes ago