இனி இவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது… ஒரே நாளில் 2 கோடி ரேஷன் கார்டுகள் நீக்கம்…. லிஸ்ட்டில் உங்கள் பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க….!

Spread the love

இந்தியா முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் அரிசி, சர்க்கரை, கோதுமை, பருப்பு மற்றும் பாமாயில் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி, பொங்கல் பரிசு மற்றும் பேரிடர் கால நிவாரண உதவிகள் போன்ற அரசின் பல்வேறு நலத்திட்டங்களும் இந்த ரேஷன் அட்டைகளின் அடிப்படையிலேயே விநியோகிக்கப்படுகின்றன. இதனால் பெரும்பாலான குடும்பங்கள் ரேஷன் அட்டையை முதன்மையான ஆவணமாக வைத்துள்ளன. இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய மத்திய உணவுத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, நாடு முழுவதும் சுமார் 8.51 கோடி ரேஷன் அட்டைகள் தகுதியற்றவை என்பதை மத்திய உணவு அமைச்சகம் கண்டறிந்துள்ளதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். இறந்து போனவர்களின் பெயர்களில் புழக்கத்தில் இருக்கும் அட்டைகள், வருமான வரி செலுத்துவோர் மற்றும் கார் வைத்திருப்போர் போன்ற தகுதியற்ற நபர்களின் அட்டைகள் இந்த பட்டியலில் அடங்கும்.

இத்தகைய தகுதியற்ற நபர்களை பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்க மத்திய அரசு தீவிரமாக முடிவெடுத்து, அதற்கான பட்டியலை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, நாடு முழுவதும் இதுவரை சுமார் 2.21 கோடி ரேஷன் அட்டைகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன. அதே வேளையில், தகுதியுடைய புதிய பயனாளிகள் 3 கோடி பேருக்கு புதிய ரேஷன் அட்டைகளை வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தமட்டில், கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் புதிய ரேஷன் அட்டைகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் முதற்கட்டமாக, தகுதியின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு 46 ஆயிரம் புதிய குடும்ப அட்டைகள் அச்சிடப்பட்டு விநியோகத்திற்குத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

Nanthini

Recent Posts

அடே… என்னடா இது… விநாயகரை ஏந்திய அஜித் பவார் சிலை… இளைஞரின் செயலால் இணையத்தில் வெடித்த விவாதம்… புனேவில் ஷாக்கிங் சம்பவம்…!

மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த தர்ஷன் சோனாவனே என்ற வாலிபர், விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக மறைந்த முன்னாள் துணை முதல்வர்…

46 minutes ago

டேய்… என்னடா இது… விநாயகர் பக்கத்துல குளிகன் தெய்வமா?… போபாலில் காந்தாரா பாணி… பந்தலைப் பார்த்து மிரண்டுபோன பக்தர்கள்… இணையத்தில் வைரல் வீடியோ…!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள இந்திரபுரிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 'இந்திரபுரி கே ராஜா' விநாயகர் பந்தல், 'காந்தாரா' திரைப்படத்தின்…

50 minutes ago

என்னது… விநாயகருக்கு லட்டுக்கு பதிலா டீயா?… தாய்லாந்தில் அரங்கேறும் வினோத வழிபாடு… நெட்டிசன்களை வியக்கவைத்த சம்பவம்…!!

வழக்கமாக விநாயகப் பெருமானுக்கு லட்டு மற்றும் மோதகம் படைக்கப்படும் நிலையில், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள பக்தர்கள் "போபா டீ"…

57 minutes ago

“சாக்கடையில் மிதந்த சடலம்…” பிறந்தநாள் பார்ட்டியில் நுழைந்த போலீஸ்…. வாலிபரை அடித்து கொன்றதாக குற்றச்சாட்டு…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மல்லுபுரா காவல் எல்லைக்குட்பட்ட தனௌலி மயானம் அருகே உள்ள சாக்கடையில், வாலிபர் ஒருவரின் சடலம்…

1 மணத்தியாலம் ago

அடச்சீ… நீயெல்லாம் ஒரு மனுஷனா… பேல் பூரி வியாபாரியை அடித்து நொறுக்கி… பொரியை ரோட்டில் கொட்டிய கொடூரம்… பீகார் போலீஸ் எடுத்த அதிரடி முடிவு…!!

பீகாரில் வீதியோரம் காரப்பொறி வியாபாரம் செய்து வந்த ஏழை வியாபாரி ஒருவரை, நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும்…

1 மணத்தியாலம் ago

“நான் ஆறுதலா இருப்பேன்…” நகை கடை அதிபரின் மகளுடன் நட்பு… மீண்டும் வந்த கணவர் கேட்ட ஒற்றை கேள்வி… போலீஸ் ஸ்டேஷனில் அழுது புலம்பிய பெண்…. பகீர் சம்பவம்…!!

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர், குடும்பத் தகராறு காரணமாகத் தனது கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். பாரிமுனையில்…

1 மணத்தியாலம் ago