தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள பட்டாஞ்செரு பகுதியில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலையை நீரில் கரைக்க செய்யச் சென்ற 6 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பட்டாஞ்செரு அருகே உள்ள காஞ்செர்லா கிராமத்தில் உள்ள நீர்நிலைக்கு, விநாயகர் சிலையைக் கரைப்பதற்காக மாணவர்கள் உற்சாகத்துடன் சென்றுள்ளனர். நீரில் இறங்கிச் சிலையை கரைக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குச் சென்று ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கித் தத்தளித்துள்ளனர்.
கண் இமைக்கும் நேரத்திற்குள் நடந்த இந்த கொடூர சம்பவத்தில் 6 மாணவர்களும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த 6 பேருமே அப்பகுதியில் உள்ள ‘ஷிரீஷா சேவா அறக்கட்டளை’ நிறுவனத்தில் தங்கிப் படித்து வந்த மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது. பண்டிகை நேரத்தில் 6 பிஞ்சு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டம் காசரோல் காவல் எல்லைக்குட்பட்ட மூர்கியா கிராமத்தில், ஒரே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த அண்ணன்,…
ஹரியானா மாநிலம் சோனிபட் பகுதியில், ஆபத்தான ரகத்தைச் சேர்ந்த பிட்புல் வளர்ப்பு நாய் ஒன்று, 6 மாதமே ஆன கைக்…
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகிலுள்ள ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் அதிகாலை 5 மணி முதலே அதிர வைக்கும் ஒரு சம்பவம்…
ஜார்க்கண்ட் மாநிலம் சக்ரதார்பூர் பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த அனிதா பிந்த்…
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள பிரபல மத்திய சந்தைப் பகுதியில் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து தொழிலதிபர் ஒருவர் கட்டிய…
தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகள் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட பிறகே பாமக சட்டமன்ற உறுப்பினர்களின் விவாதங்களும் ஆக்கப்பூர்வமான கருத்துகளும் பொதுமக்களிடம் நேரடியாகச் சென்று…