அரசியலை விட்டே ஓட ரெடியா?… “ஒரே ஒரு சீட் ஜெயிச்சு காட்டுங்க பார்ப்போம்”… ஆதவ் அர்ஜுனாவுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் வைத்த மரண மாஸ் செக்….!

Spread the love

தமிழக அரசியலில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கும் (தவெக) எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையேயான வார்த்தைப் போர் தற்பொழுது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக வென்று ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியின் தயவால்தான் விஜய் அரசு நீடிப்பதாகவும், இந்த அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழும் என்றும் திமுகவினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுகவிற்கு அடுக்கடுக்கான சவால்களை விடுத்தது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திமுக இன்னும் தனது தோல்விக்கான உண்மையான காரணத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்று சாடிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இன்னும் எட்டு மாதங்களில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிப்பிட்டுப் பேசினார். “தமிழகத்தில் உள்ள மொத்தமுள்ள 25 மாநகராட்சி மேயர் பதவிகளில் ஒரே ஒரு மேயர் பதவியையாவது திமுக வெற்றி பெற்று காட்டட்டும்; தில்லும் தைரியமும் இருந்தால் எங்களோடு மோதிப் பாருங்கள்” என திமுகவிற்கும், அதன் செயல் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் பகிரங்கமாகச் சவால் விடுத்தார். மேலும், இந்த உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களையும் தவெகதான் கைப்பற்றும் என்றும் அவர் அதிரடியாகத் தெரிவித்தார்.

ஆதவ் அர்ஜுனாவின் இந்த ஆணவப் பேச்சுக்கு திமுக தரப்பில் இருந்து தற்பொழுது மிகக் கடுமையான எதிர்வினைகள் வரத் தொடங்கியுள்ளன. திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் இதற்கு அனல் பறக்கும் பதிலடி கொடுத்துள்ளார். திடீரெனப் பொறுப்பிற்கு வந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தனது பதவியின் கண்ணியத்தை மறந்துவிட்டு, தைரியம் என்றெல்லாம் அநாகரிகமாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது என்று அவர் சாடியுள்ளார்.

மேலும் ஆதவ் அர்ஜுனாவிற்கு நேரடி சவால் விடுத்துள்ள அனிதா ராதாகிருஷ்ணன், “நாங்கள் தமிழக மக்கள் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளோம். முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில், வரவிருக்கும் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் ஒரே ஒரு மேயர் பதவி மட்டுமல்ல, அனைத்து மேயர் பதவிகளையும், உள்ளாட்சி அமைப்புகளையும் திமுகவே முழுமையாகக் கைப்பற்றும். நாங்கள் அப்படி அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றால், நீங்கள் அரசியலை விட்டே விலகத் தயாரா?” என்று அதிரடிக் கேள்வி எழுப்பியுள்ளார். உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தவெக – திமுக இடையே ஏற்பட்டுள்ள இந்த நேரடி மோதல் தமிழக அரசியலை மேலும் சூடாக்கியுள்ளது.

Nanthini

Recent Posts

என் புருஷனே விட்டுட்டு போயிட்டாரு… மூன்று பிஞ்சுகளை துடிதுடிக்க கொன்று… தாய் எடுத்த விபரீத முடிவு… நடுங்க வைக்கும் அந்த ஒரு சம்பவம்…!

பஞ்சாப் மாநிலம் மன்சா பகுதியில் நிகழ்ந்துள்ள ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட…

6 minutes ago

வைரல் வீடியோ: செய்தியாளர்களைப் பார்த்து நடுவிரலைக் காட்டிய வருங்கால மனைவி… இந்தியாவையே உலுக்கும் காட்சிகள்…. பின்னணியில் இருக்கும் திகிலூட்டும் ரகசியம்…!

இந்தியாவையே உலுக்கிய கேதன் அகர்வால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சியா கோயல், புனேவில் உள்ள அவரது…

13 minutes ago

தவெக அமைச்சர் சிக்கினார்… கோர்ட் அதிரடி உத்தரவு… அடுத்த பரபரப்பு…!

தம்பி மற்றும் அவரது மனைவியைக் கொடூரமாகத் தாக்கிய வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் மரிய வில்சன் நாளை…

21 minutes ago

Breaking: சிங்கப்பூர் ஹாஸ்பிடலில் எ.வ.. வேலு அனுமதி… சற்று முன் பரபரப்பு…!

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…

28 minutes ago

இதுதான் காதலின் உச்சமா?… உலகப் புகழ்பெற்ற நியூயார்க் கோபுரத்தில் காதலர்களின் முத்த மழை… உலகத்தையே கதி கலங்க வைத்த சாகசம்… நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ…!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள, 102 மாடிகளைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில், எந்தவித பாதுகாப்பு…

1 மணத்தியாலம் ago

அப்படி போடு… பெரம்பூர் மக்களே ரெடியா?… புகார் கொடுத்த சில நொடிக்ளிலயே தீர்வு… மக்களுக்காக அதிரடி முடிவெடுத்த முதல்வர் விஜய்… பெரம்பூர் தொகுதிக்கு வந்த புதிய அதிரடி மாற்றம்…!

சென்னை மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான பெரம்பூரில், கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தற்போதைய…

1 மணத்தியாலம் ago