ரிஸ்க் எடுக்கிறது எல்லாம் நமக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி.. ஏ.ஆர் ரகுமானை தொடர்ந்து அனிருத் எடுக்கும் புதிய முயற்சி..!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களின் ஒருவர்தான் இசையமைப்பாளர் அனிருத். சமீபத்தில் வெளியான லியோ, விக்ரம், ஜெயிலர், வேட்டையன் மற்றும் ஜவான் என அனைத்து வெற்றி படங்களிலும் அனிருத் முக்கிய ஒருவராக இருந்துள்ளார். அவருடைய பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்தது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் உள்ள சூப்பர் ஸ்டார் படங்களுக்கு அனிருத் தான் இசையமைத்து வருகின்றார். அனிருத் இசையில் வரும் பாடல்கள் படங்களுக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன.

அனிருத் 2011 ஆம் ஆண்டு வெளியான வை திஸ் கொலவெறி பாடல் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பிறகு 2014 ஆம் ஆண்டு விஜய் நடித்த கத்தி திரைப்படத்திற்கு இசையமைத்து புகழ்பெற்றார். அனிருத் இதுவரை இரண்டு பிலிம் பேர் விருதுகள், 9 சைமா விருதுகள் மற்றும் ஆறு எடிசன் விருதுகள் ஆகியவற்றை பெற்றுள்ளார். அதே சமயம் உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றார்.  இப்படியான நிலையில் லப்பர் வந்து திரைப்படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் அடுத்ததாக புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

முழுக்க முழுக்க கிராமத்து கதையை மையமாகக் கொண்டு உருவாகுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனுஷ் தற்போது இட்லி கடை திரைப்படத்தை இயக்கி நடித்து வரும் நிலையில் இந்தப் படத்தை முடித்த கையோடு தமிழரசன் பச்சமுத்து இயக்கம் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதில் முதல் முறையாக அனிருத் கிராமத்து கதைக்கு இசையமைக்க போகிறார்.

ஏற்கனவே கிழக்கு சீமையிலே திரைப்படத்தில் ஏ ஆர் ரகுமான் முதல் முறையாக கிராமத்து கதைக்கு இசையமைக்கும் போது இதெல்லாம் செட் ஆகுமா என்று அனைவரும் யோசித்த நிலையில் தனது இசையால் அனைவரையும் வியக்க வைத்தார். அவரைத் தொடர்ந்த தற்போது அனிருத் புதிய முயற்சியை கையாளும் நிலையில் இது அவருக்கு கை கொடுக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Nanthini

Recent Posts

காப்பாத்துங்க…! கொழுந்துவிட்டு எரிந்த தீ… நெருப்பு வளையத்தில் சிக்கிய ஐடி அதிகாரிகள்… சினிமா பாணியில் அரங்கேறிய மாஸ் மீட்பு…!!

மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…

47 minutes ago

“ஆட்டோ டயரில் நாய் சிறுநீர் கழித்ததால் வந்த வினை…” 23 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை…! சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…

54 minutes ago

“அப்பாவை விட்டுடுடா”கதறிய குடும்பம்… போதையில் வெறிச்செயல் செய்த பெற்ற மகன்… நடுரோட்டில் நடந்த நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…

55 minutes ago

ஈரான் அளித்த அதிரடி ஆஃபர்… அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க… ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை… ட்ரம்ப் எடுக்க போகும் முடிவு என்ன?…

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…

1 மணத்தியாலம் ago

சினிமா பாட்டு தகராறா?.. இல்லை பழிக்குப் பழியா?.. ரத்த வெள்ளத்தில் கோவில் வளாகம்… இரட்டைக் கொலையில் வெடிக்கும் புது ட்விஸ்ட்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…

1 மணத்தியாலம் ago

தாயுடன் நெருக்கம்… மகனுக்கு மிரட்டல்… செல்போனை நோண்டிய போலீசுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி… இறுதியில் நீதிமன்றம் கொடுத்த மரண அடி…!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…

1 மணத்தியாலம் ago