Categories: சினிமா

அந்தப் படத்துல நடிச்சதுக்கு அப்புறம் பிச்சைக்காரன் மாதிரி ஆயிட்டேன்.. எந்த படத்தில் நடிக்க முடியல.. நடிகர் ஷாம் ஓபன் டாக்..!

Spread the love

தமிழ் சினிமாவில் குஷி திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தான் ஷாம். அதன் பிறகு இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற பல திரைப்படங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதே சமயம் ஒரு சில நடிகர்களுக்கு நண்பராகவும் திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன்படி ஷாம் நடிப்பில் இயக்குனர் துரை இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஆறு மெழுகுவர்த்திகள். இந்த படத்தில் ஷாமுக்கு ஜோடியாக பூனம் கவுர் நடித்திருந்தார். மேலும் இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்தது மட்டுமல்லாமல் படத்தை தயாரிக்கவும் செய்திருந்தார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான படம் நாங்க ரொம்ப பிசி. இந்த படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெறவில்லை என்று தான் கூற வேண்டும். இப்படியான நிலையில் ஷாம் நடித்த ஆறு மெழுகுவர்த்திகள் திரைப்படத்திற்காக தனது உடல் தோற்றத்தை முழுவதுமாக மாற்றிக்கொள்ள ஷாம் மிகவும் சிரமப்பட்டுள்ளார். பத்து நாட்களுக்கு மேல் தூங்காமல் இருந்து கண்களை எல்லாம் வீங்க வைத்து உடல் எடையை குறைத்து சோர்வுற்ற நிலையில் நடித்த காட்சிகள் ரசிகர்களின் மத்தியில் பாராட்டை பெற்றது. இந்த படத்தைத் தொடர்ந்து 25 திரைப்படங்களுக்கு மேல் நடித்தும் சினிமாவில் தற்போது வரை முன்னணி நடிகர் என்ற அந்தஸ்து ஷாமுக்கு கிடைக்கவில்லை.

இவர் இறுதியாக விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போதும் இவர் ஒரு சில திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படியான நிலையில் நடிகர் ஷாம் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஆறு மெழுகுவர்த்திகள் திரைப்படத்தில் நடித்த போது ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில், ஆறு மெழுகுவர்த்திகள் திரைப்படத்தில் நடித்த அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது. இரண்டு வருடம் தாடி எல்லாம் வளர்த்து உடல் எடையை குறைத்து கண்கள் அனைத்தையும் நீங்க வைத்து ரொம்ப சிரமப்பட்ட.

அந்தப் படத்தில் நடிப்பதற்காக கெட்டப் மாற்றிக் கொண்டிருந்ததால் வேறு படத்திலும் என்னால் நடிக்க முடியவில்லை. தாடி எல்லாம் வளர்த்த உடல் எடையை குறைத்து ஒரு கெட்டப்பிற்கு வந்த பிறகு டைரக்டர் துரை சார் என்னை பார்த்து தம்பி ஓரளவுக்கு பிச்சைக்காரன் கெட்டப்புக்கு வந்துட்ட இன்னும் வேற என்ன பண்ணலாம் என்று கேட்டார். உடனே நான் எனக்கு இரண்டு மூன்று நாட்கள் தூங்காமல் இருந்தால் கண்கள் வீங்கிவிடும் அது மாதிரி ட்ரை பண்ணலாம் என்று சொன்னதும் அவரும் சரின்னு சொல்லிட்டாரு. அதற்காக ஐந்து ஆறு நாட்கள் தூங்காமல் இருந்து கண்களை எல்லாம் வீங்க வைத்தேன்.

இதனைப் பார்த்ததும் நடிகர் சுதீப் என்னை மிகவும் திட்டினார். ஒரு நடிகருக்கு அழகே அவருடைய முகம் தான் நீ அதையே இப்படி எடுத்து வச்சிருக்கியே என்று திட்டினாரு. இருந்தாலும் அவர்கிட்ட சூழ்நிலையை சொல்லி சமாதானப்படுத்திட்டு படத்துக்காக என்ன மாத்திகிட்ட. இவ்வளவு சிரமப்பட்டு நடித்தும் இந்த படத்திற்கான சரியான அங்கீகாரம் எனக்கு கிடைக்கவில்லை என்பதெல்லாம் வருத்தம் கிடையாது. ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் கிடைத்ததே எனக்கு மிகுந்த மகிழ்ச்சி என ஷாம் பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

காப்பாத்துங்க…! கொழுந்துவிட்டு எரிந்த தீ… நெருப்பு வளையத்தில் சிக்கிய ஐடி அதிகாரிகள்… சினிமா பாணியில் அரங்கேறிய மாஸ் மீட்பு…!!

மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…

2 மணத்தியாலங்கள் ago

“ஆட்டோ டயரில் நாய் சிறுநீர் கழித்ததால் வந்த வினை…” 23 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை…! சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…

2 மணத்தியாலங்கள் ago

“அப்பாவை விட்டுடுடா”கதறிய குடும்பம்… போதையில் வெறிச்செயல் செய்த பெற்ற மகன்… நடுரோட்டில் நடந்த நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…

2 மணத்தியாலங்கள் ago

ஈரான் அளித்த அதிரடி ஆஃபர்… அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க… ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை… ட்ரம்ப் எடுக்க போகும் முடிவு என்ன?…

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…

2 மணத்தியாலங்கள் ago

சினிமா பாட்டு தகராறா?.. இல்லை பழிக்குப் பழியா?.. ரத்த வெள்ளத்தில் கோவில் வளாகம்… இரட்டைக் கொலையில் வெடிக்கும் புது ட்விஸ்ட்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago

தாயுடன் நெருக்கம்… மகனுக்கு மிரட்டல்… செல்போனை நோண்டிய போலீசுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி… இறுதியில் நீதிமன்றம் கொடுத்த மரண அடி…!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…

2 மணத்தியாலங்கள் ago