#image_title
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் கிரிக் பார்ட்டி எனும் கன்னட படத்தின் மூலம் 2016-ல் திரையுலகில் கால் பதித்தார். கன்னடத்தில் அஞ்சனை புத்ரா, சமக் படங்களைத் தொடர்ந்து தெலுங்கில் சலோ எனும் படத்தின் மூலம் அறிமுகமானார். 2018ல் விஜய் தேவரகொண்டா ஜோடியாக ‘கீத கோவிந்தம்’ படத்தில் நடித்ததன் பிறகு இந்தியா முழுவதும் இளைஞர்களைக் கவர்ந்து ‘நேஷனல் கிரஷ்’ ஆக மாறினார்.
#image_title
தமிழில் இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ படத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து தற்பொழுது பாலிவுட்டில் கால்பதித்து கலக்கி வருகிறார். அமிதாபச்சன் உடன் குட் பை, ரன்பீர் கபூர் உடன் அனிமல் என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வருகிறார். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இந்த அனிமல் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து , வசூலையும் வாரி குவித்து வருகிறது.
டிசம்பர் 1ம் தேதி வெளியான அனிமல் திரைப்படம் இந்த ஆண்டு வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல், அனில் கபூர் நடித்த இத்திரைப்படம் வெளியான முதல் நாளே 116 கோடி வசூலை ஈட்டியது. ஒரே வாரத்தில் 500 கோடியை எட்டி சாதனை படைத்தது.
தற்பொழுது இத்திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் 600 கோடியை கடந்துள்ளது. இன்னும் தியேட்டர்களில் ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருக்கும் இத்திரைப்படம் 1000கோடியை கடந்து சாதனை படைக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அனிமல் திரைப்படத்தின் மூலம் தற்பொழுது பாலிவுட்டின் கவனிக்கத்தக்க நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார் நடிகை ரஷ்மிகா.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள, 102 மாடிகளைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில், எந்தவித பாதுகாப்பு…
சென்னை மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான பெரம்பூரில், கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தற்போதைய…
தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சியை கவிழ்ப்பதற்குக் குதிரை பேரம் பேசப்பட்டதாக…
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக் கட்டணத்தை செலுத்த மறுத்த நோயாளி…
மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக, பிரபல தொலைக்காட்சி நடிகை ஊர்வசி தோலாக்கியாவின் மகனும் நடிகருமான க்ஷிதிஜ் தோலாக்கியாவின் கார்…
தமிழக அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் திருப்பமாக, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜய்…