நள்ளிரவில் கேட்ட மரணஓலம்… பேருந்து நேருக்கு நேர் மோதி 3 பேர் உடல் நசுங்கி பலி…. பதைபதைக்க வைக்கும் விபத்து…!

Spread the love

ஆந்திர பிரதேச மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள கல்யாண்துர்க் நகரில் இருந்து ராயதுர்க் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தும், எதிரே வந்த காரும் கூபனப்பள்ளி பகுதி அருகே எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த பயங்கர மோதலில் கார் முற்றிலுமாக உருக்குலைந்த நிலையில், அதில் பயணம் செய்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மீட்புப் படையினர், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு காரின் இரும்பு பாகங்களை அறுத்து எடுத்து, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கல்யாண்துர்க் காவல்துறையினர் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் பலியான மூன்று பேரும் அண்டை மாநிலமான கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் மீது மோதியதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து கல்யாண்துர்க் டி.எஸ்.பி. ரவி பாபு தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Nanthini

Recent Posts

விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மு.க அழகிரியின் மகள்… அதிர்ச்சியில் திமுக..!!

தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…

10 minutes ago

கட்சியின் செய்தித்தொடர்பாளராகத்தான் பேசினேன்” – சர்ச்சைக்குப் பிறகு மன்னிப்புக் கோரிய டிஎம்சி பிரமுகர்: வைரல் வீடியோ..!!

திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ரிஜு தத்தா, ஐபிஎஸ் அதிகாரி அஜய் பால் சர்மா குறித்து…

13 minutes ago

BREAKING: விஜய்க்கு முதல் நாளிலேயே பெரும் அதிர்ச்சி…!!

தமிழக முதல்வராகப் பதவியேற்றுக்கொண்ட விஜய்க்கு, முதல் நாளிலேயே பெரும் அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது. வழக்கமாகத் தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள்…

19 minutes ago

மனிதாபிமானம் செத்துவிட்டதா..? கொன்ஜம் கூட மனசாட்சி இல்லாம.. காஷ்மீரில் தெரு நாயை கற்களால் அடித்துக் கொன்ற கும்பல் – பதறவைக்கும் வீடியோ…!

காஷ்மீரில் தெரு நாய் ஒன்று கும்பலால் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மனிதாபிமானமற்ற…

24 minutes ago

அடுத்த ‘தளபதி’ ரெடி… உதயநிதிக்கு கிடைத்த புதிய ‘பவர்’…. சற்றுமுன் அறிவிப்பு…!

தமிழக அரசியலில் ஒரு முக்கிய நகர்வாக, திமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சேப்பாக்கம் -…

32 minutes ago

மே 13-ல் விஜய்க்கு அக்னிப் பரீட்சை…. தவெக ஆட்சிக்கு ஆதரவு கொடுக்கும் அதிமுக எம்.எல்.ஏக்கள்?… தமிழக அரசியலில் பரபரப்பு….!

மூத்த பத்திரிகையாளர் துரை கருணா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி, தமிழக அரசியலில் குறிப்பாக அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம்…

38 minutes ago