பாமகவில் ராமதாஸிற்கும் அவருடைய மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே மோதல் போக்கு நீட்டித்து வருகிறது. கட்சியின் முழு அதிகாரம் தனக்கே உள்ளது என்று இருவரும் கூறி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் தங்களுடைய பலத்தை கட்சியில் நிரூபிக்க வேண்டும் என்பதற்காக இருவரும் கூட்டத்தையும் நடத்தி வருகிறார்கள். மேலும் அன்புமணியின் ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்குவதும் அடுத்த சில நிமிடங்களில் நீக்கப்பட்டவர்கள் அதே பதவியில் தொடர்வார்கள் என்றும் அன்புமணி அறிவித்து அதிரடி காட்டுவதுமாக இருந்து வருகிறது. ஒருவரை ஒருவர் மாறி மாறி பயங்கரமாக குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இந்நிலையில், அன்புமணி ராமதாஸ் நடத்திய பொதுக்குழு சட்டவிரோதமானது என்று தேர்தல் ஆணையத்திற்கு பாமக செய்தி தொடர்பாளர் கடிதம் எழுதியுள்ளார். அதில், கட்சி விதி 13 படி பொதுக்குழு, செயற்குழுவுக்கு கட்சி நிறுவனர் ஒப்புதல் தர வேண்டும். அவரின் ஒப்புதல் இன்றி தன்னிச்சையாக அவரின் பதவி காலத்தை நீட்டித்துள்ளார். அன்புமணியிடம் விளக்கம் கூறி தேர்தல் ஆணையம் அனுப்பி விசாரணை நடத்த வேண்டும் என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…