விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே நள்ளிரவில் பேருந்துக்காக காத்திருந்த மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த தணிகாசலம் என்ற நபர், கஞ்சா மற்றும் மதுபோதையில் வந்த இருவரால் கத்திக் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலியில் நடைபெற்ற துக்க நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு குற்றாலம் செல்வதற்காக நள்ளிரவு 12 மணியளவில் அங்கு நின்றுகொண்டிருந்த அவரிடம், அந்த நபர்கள் திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் போலீசார் உடனடியாக விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், தீவிர தேடுதலுக்குப் பிறகு நள்ளிரவு 3 மணியளவிலேயே குற்றவாளிகள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் எனவும், குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து வீரத்தமிழர் மக்கள் கழகத் தலைவர் பந்தல் ராஜா மற்றும் வெள்ளாளர் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவர் புதியராஜ் தலைமையில் உறவினர்கள் ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் மதுரை – தென்காசி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து, அவர்கள் மறியல் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத், விஜயநகர் பகுதியில் உள்ள 'கௌர் சித்தார்த்தம்' அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 16 வயது…
சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 36 வயதான மையூர் சாகீக் என்ற இளைஞர், தனது வீட்டில் வேலையில் ஈடுபட்டிருந்தபோது மரப்பலகையின்…
சோதனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், காலை 7 மணிக்குத் தொடங்கிய சோதனை முடியும் வரை…
தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6-ஆம்…
தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கு அரசின் அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில்,…
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காதவர்களுடன் எதற்கு கூட்டணி என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி…