தமிழகத்தில் அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அதேசமயம் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியிலும் டெல்லி தலைமை தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய்யை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக இபிஎஸ் தொடர்ந்து விஜய் இடம் பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில் சமீபத்தில் கூட கூட்டணிக்கு பிள்ளையார் சூழலில் போடப்பட்டு விட்டதாக சூசகமாக தெரிவித்திருந்தார். ஆனால் சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகம் நடத்திய பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் விஜய் தான் என அறிவிக்கப்பட்டு விட்டது. இதனால் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது ஏறத்தாழ உறுதியாகி உள்ளது.
இந்நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் ஆகியோர் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இரு தரப்பினரும் தொலைபேசி மூலமாக தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. டிடிவி தினகரன் உடன் இருக்கும் ஓபிஎஸ்-க்கு இதில் சம்மதம் என கூறினாலும் அவருடன் இருப்பவர்கள் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லையாம். விஜய் கட்சி இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றாலும் பல்வேறு அரசியல் கட்சிகள் அவருடன் இணைவதற்காக முயற்சிகள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
கோவையைச் சேர்ந்த 19 வயதான இளம்பெண் ஒருவர், அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.எஸ்சி. படித்து வருகிறார்.…
மும்பையில் பெண் பயணி ஒருவரிடம் ஆட்டோ ஓட்டுநர் அநாகரீகமான முறையில் பாலியல் ரீதியான கருத்துக்களைத் தெரிவித்த சம்பவம் சமூக வலைதளங்களில்…
மத்திய அரசு தேசிய கீதத்தை ( வந்தே மாதரம்) முதலில் பாட உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் பதவி ஏற்பு…
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த காவேரிராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் தீபக், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார்…
தமிழக அரசியலில் கடந்த சில ஆண்டுகளாகவே அண்ணாமலையின் அரசியல் நகர்வுகள் உற்றுநோக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் பாஜாகவிலிருந்து விலகியிருப்பது பெரும்…
மாநிலங்களவை (ராஜ்யசபா) எம்பி சீட்டை காங்கிரஸ் கட்சிக்கு தமிழக முதல்வர் விஜய் விட்டுக் கொடுத்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும்…