Connect with us

CINEMA

கமலின் வெற்றியைப் பாரத்து பயந்த அமிதாப் பச்சன்.. சேர்ந்து நடிக்கலாம் என அழைத்து காலை வாரியக் கதை!

தமிழ் சினிமாவில் 65 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இயங்கி வருகிறார். நடிப்பு, இயக்கம், பாடல் பாடுதல், பாடல் எழுதுதல், தயாரிப்பு என ஒரு பல்துறை வித்தகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மூன்றாம் பிறை, நாயகன் மற்றும் இந்தியன் ஆகிய மூன்று திரைப்படங்களுக்காக தேசிய விருது பெற்றுள்ளார்.

பாலச்சந்தர் இயக்கிய ஏக் தூக் ஜே கேலியே என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் கமல். அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார் கமல்ஹாசன். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல பாலிவுட் பட வாய்ப்புகள் கமலுக்கு குவிய ஆரம்பித்தன.

   

கமல்ஹாசனின் அசுர வளர்ச்சியைப் பார்த்து அப்போது பாலிவுட் நடிகர்கள் பயந்ததாகவும், அதனால் அவரை எப்படியாவது பாலிவுட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என முயற்சிகள் மேற்கொண்டதாகவும் அப்போதே தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் அப்போதைய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனே கமல்ஹாசனின் இந்தவளர்ச்சியை அச்சத்தோடுதான் பார்த்துள்ளார். 1985 ஆம் ஆண்டு அமிதாப் பச்சன், கமல் நடிப்பில் ‘கபர்தார்’ என்ற படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. படத்தின் ஷூட்டிங் செல்ல கதையில் தன்னைவிட கமலுக்குதான் அதிக முக்கியத்துவம் உள்ளது. அதனால் படம் வெளியானால் தன்னைவிட கமலுக்குதான் பாராட்டு கிடைக்கும் என்ற அச்சத்தில் கதையை மாற்ற சொல்லியுள்ளார்.

கதைப்படி கமல் கதாபாத்திரம் கிளைமேக்ஸில் இறந்துவிடுவது போல உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அது வேண்டாம் என அமிதாப் கூறியுள்ளார். இப்படி பல குளறுபடிகளை செய்து அந்த படத்தை மேற்கொண்டு வளரவிடாமல் செய்துவிட்டாராம். இதன் பின்னர் கமல், பாலிவுட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி முழுக்க தமிழ் சினிமாவில் கவனம் செலுத்த் ஆரம்பித்துள்ளார்.

அவ்வப்போது தன்னுடைய அபூர்வ சகோதரர்கள், அவ்வை சண்முகி போன்ற படங்களை மட்டும் இந்தியில் டப் செய்து வெளியிட ஆரம்பித்துள்ளார். கமல்ஹாசனுக்கு மட்டுமில்லாமல் ரஜினிகாந்துக்கும் இதுபோன்ற பிரச்சனைகள் பாலிவுட்டில் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்தியில் அவர் நடித்த படங்கள் பெரும்பாலும் அவரை குணச்சித்திர வேடத்தில் வைத்தே உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Continue Reading

More in CINEMA

To Top