கன்னட சினிமாவில் நடிக்க ஆரம்பித்து பின்னர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.
தற்போது பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். தெலுங்கு திரைப்படத்தில் தன்னுடைய க்யூட்டான எக்ஸ்பிரஸானால் ஆந்திராவை கலக்கிய இவர் கீதா கோவிந்தம், சாம்ராட், புஷ்பா ஆகிய திரைப்படங்களில் நடித்து மிகவும் புகழ்பெற்றார்.
அதுவும் புஷ்பா திரைப்படம் முழுவதும் இவரை பிரபலமாக்கியது. பின்னர் அமிதாப்பச்சன் உடன் இணைந்து ஹிந்தியில் குட்பை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இதன் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான இவர் தற்போது ரன்பீர் கபூர் நடிப்பில் வெளிவந்த அனிமல் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
தமிழில் சுல்தான் திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அறிமுகமான ராஷ்மிகா விஜயின் வாரிசு திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய ராஷ்மிகா மந்தனா தான் எடுக்கக்கூடிய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார்.
அந்த வகையில் தற்போது ஆங்கில பத்திரிக்கை அட்டைப்படத்திற்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோஸ் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.