பாலா இயக்கத்தில் விக்ரம் நடித்து சூப்பர் ஹிட்டான சேது திரைப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க முதலில் முரளிதான் ஒப்பந்தம் ஆனாராம். அப்போது அவர் பிஸியான நடிகராக இருந்தும் அந்த படத்துக்காக மொட்டை அடிக்க துணிச்சலாக சம்மதித்தாராம். ஆனால் அது நடக்காததால் அதன் பின்னர் விக்ரம்மை வைத்து சேது படத்தை எடுத்து பல போராட்டங்களுக்குப் பிறகு படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.
அந்த படத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு கிடைத்த அரிய ரத்தினங்கள் என்று பாலா, அமீர், விக்ரம் மற்றும் சசிகுமார் ஆகியோர்களை சொல்லலாம். அந்த படத்தில் இருந்துதான் அவர்களெல்லாம் புகழ் வெளிச்சம் பெற்று தங்களுடைய அடுத்தடுத்த படைப்புகளைக் கொடுத்தார்கள்.
இதில் இயக்குனர் அமீர் கொடுத்த கலையுச்சம் பெற்ற படைப்பு என்று பருத்திவீரன் படத்தை சொல்லலாம். அந்த படத்தில் கார்த்தியை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி அவருக்கு 100 படங்களில் நடித்த கதாநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பைக் கிடைக்கவைத்தார். அந்த படைப்பின் பாதியைத் தொடுமளவுக்குக் கூட அமீரால் தன்னுடைய அடுத்த படத்தைக் கொடுக்க முடியவில்லை.
ஆதிபகவன் ரிலீஸாகி 12 ஆண்டுகளாகியும் இன்னும் அவர் இயக்கத்தில் எந்த படமும் ரிலீசாகவில்லை. இடையில் அவர் தொடங்கிய ‘சந்தன தேவன்’ மற்றும்’இறைவன் மிகப் பெரியவன்’ ஆகிய திரைப்படங்கள் ரிலீஸாகாமல் முடங்கியுள்ளன. இதில் சந்தன தேவன் திரைப்படம் அதன் பட்ஜெட் காரணமாக தொடர முடியாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் சந்தன தேவன் படம் முடங்கியது குறித்து பேசிய அமீர் “தமிழ் சினிமாவில் யாரும் கதையை நம்பி அந்த கதைக்கு என்ன தேவை என்று பார்த்து பட்ஜெட் ஒதுக்குவதில்லை. மாறாக அந்த படத்தில் நடிக்கும் நடிகர் மற்றும் இயக்கும் இயக்குனர் ஆகியோரின் மார்க்கெட்டைப் பொறுத்தே பட்ஜெட் போடுகிறார்கள். இது தவறான ஒன்று” எனப் பேசியுள்ளார்.
மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…