பிரபல நடிகையும் அரசியல் பிரமுகருமான குஷ்பு, ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கோபத்துடன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தனது தாயாருக்காக விலையுயர்ந்த பர்னிச்சர் (Furniture) ஒன்றை ஆர்டர் செய்திருந்த நிலையில், அது தன்னிடம் வந்து சேராமலேயே டெலிவரி செய்யப்பட்டுவிட்டதாக அந்நிறுவனம் பொய் கூறுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாகத் கடந்த 40 நாட்களாக அமேசான் கஸ்டமர் கேர் பிரிவைத் தொடர்பு கொண்டு முறையிட்டும் எந்தப் பயனும் இல்லை என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தப் பிரச்சனை குறித்துப் பேசும்போது அங்கிருந்த ஊழியர் ஒருவர், “நீங்கள் என்ன ஆக்ஷன் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்” என அலட்சியமாகப் பதிலளித்ததாகக் குஷ்பு குறிப்பிட்டுள்ளார். நுகர்வோர் சேவையில் இவ்வளவு பெரிய நிறுவனம் இத்தகைய மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பது கண்டிக்கத்தக்கது என்றும், உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…