“என்னை ஏமாத்திட்டாங்க” பணம் போச்சு.. பொருளும் வரல.. அமேஷான் ஆன்லைன் ஷாப்பிங்கில் குஷ்புவுக்கு நேர்ந்த கதி..!!

By Soundarya on பங்குனி 16, 2026

Spread the love

பிரபல நடிகையும் அரசியல் பிரமுகருமான குஷ்பு, ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கோபத்துடன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தனது தாயாருக்காக விலையுயர்ந்த பர்னிச்சர் (Furniture) ஒன்றை ஆர்டர் செய்திருந்த நிலையில், அது தன்னிடம் வந்து சேராமலேயே டெலிவரி செய்யப்பட்டுவிட்டதாக அந்நிறுவனம் பொய் கூறுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாகத் கடந்த 40 நாட்களாக அமேசான் கஸ்டமர் கேர் பிரிவைத் தொடர்பு கொண்டு முறையிட்டும் எந்தப் பயனும் இல்லை என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தப் பிரச்சனை குறித்துப் பேசும்போது அங்கிருந்த ஊழியர் ஒருவர், “நீங்கள் என்ன ஆக்‌ஷன் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்” என அலட்சியமாகப் பதிலளித்ததாகக் குஷ்பு குறிப்பிட்டுள்ளார். நுகர்வோர் சேவையில் இவ்வளவு பெரிய நிறுவனம் இத்தகைய மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பது கண்டிக்கத்தக்கது என்றும், உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.