“இது ஏதோ பெரிய ஆபத்து”… பிரிட்டன் கடற்கரையை முற்றுகையிட்ட நீல நிற ‘ஏலியன்’ உயிரினங்கள்… தொட்டால் என்னவாகும்?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!

Spread the love

பிரிட்டனின் வடமேற்கு பகுதியிலுள்ள கும்பிரியா செயின்ட் பீஸ் மற்றும் வேல்ஸ் கடற்கரைகளில், ‘வெலெல்லா வெலெல்லா’ எனப்படும் “கடல் பட்டம்” வகை விசித்திர உயிரினங்கள் நூற்றுக்கணக்கில் கரை ஒதுங்கியிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பார்ப்பதற்கு ஏலியன் வடிவில், அடர் நீல நிறத்தில் இருக்கும் இந்த உயிரினங்கள் வழக்கமாக இந்தியா போன்ற வெப்பமண்டல கடல் பகுதிகளிலேயே அதிகம் காணப்படும். ஆனால், வழக்கத்திற்கு மாறாக பிரிட்டனில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகரித்து, வெப்பநிலை 35.2 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்ததே இவை இவ்வளவு அதிக அளவில் கரை ஒதுங்குவதற்குக் முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

தோற்றத்தில் ஜெல்லி மீன்களைப் போலக் காட்சி அளித்தாலும், இவை உண்மையான ஜெல்லி மீன்கள் அல்ல; ‘மேன் ஓ வார்’ என்ற ஆபத்தான கடல் உயிரினத்தின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவகை சிறிய உயிரினமாகும். சுயமாய் நீந்தும் திறன் அற்ற இந்த உயிரினங்கள், கடல் அலைகள் மற்றும் காற்றின் போக்கிலேயே அடித்துச் செல்லப்படுகின்றன. தற்போது இவற்றின் இனப்பெருக்கம் பெருமளவில் அதிகரித்திருப்பதால் கரை ஒதுங்கியுள்ளன. பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், இவற்றைத் தொட்டால் கடுமையான வலியும் தோல் எரிச்சலும் ஏற்படும் என்பதால், பொதுமக்கள் யாரும் அருகில் செல்ல வேண்டாம் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

பொதுவாகக் குளிர்ந்த காலநிலையைக் கொண்ட பிரிட்டன் கடற்பகுதியில், வெப்பமண்டல உயிரினங்கள் கரை ஒதுங்குவது என்பது புவி வெப்பமயமாதல் மற்றும் கடல் சூழலியலில் ஏற்படும் ஆபத்தான மாற்றங்களின் வெளிப்பாடே என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இருப்பினும், உள்ளூர் மக்களோ இத்தகைய அபூர்வ நிகழ்வை இதுவரை கண்டதில்லை என்றும், இது எதிர்காலத்தில் ஏற்படப்போகும் ஏதோவொரு பெரிய இயற்கை பேரழிவுக்கான எச்சரிக்கை மணி என்றும் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

Nanthini

Recent Posts

“57 வயது வித்தியாசம்… எல்லை தாண்டிய காதல்…” 24 வயது இளைஞரை தேடி வந்த 81 வயது மூதாட்டி… சமூக வலைதளங்களில் புயலை கிளப்பும் ஜோடி…!!

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 81 வயது மூதாட்டி ஒருவருக்கும், ஆப்பிரிக்க நாடான செனகலைச் சேர்ந்த 24 வயது இளைஞருக்கும் இடையே…

2 minutes ago

அதிர்ச்சி… உதயநிதி கைது… பின்னணியில் இருக்கும் ரகசியம்?… பரபரக்கும் தமிழக அரசியல்…!

உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதன் பின்னணியில், தவெக தலைவர் விஜய்யுடனான அரசியல் மற்றும் தனிப்பட்ட முரண்பாடுகள் மட்டுமின்றி, காவல்துறை டிஜிபி…

5 minutes ago

ஸ்டாலின் தொகுதி ரிசல்ட்… புதிய திருப்பம்… யாரும் எதிர்பார்க்காத அதிரடி ட்விஸ்ட்…

சென்னை கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் சரிபார்ப்பு பணி இன்றுடன் நிறைவடடைவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக தரப்பில் தேர்வு…

15 minutes ago

“சாதி, மதத்தில் என்ன பெருமை இருக்கிறது…?” எல்லாமே வெறும் விபத்து தான்…! சமூக வலைதளத்தில் நடிகை மீனா பரபரப்பு பதிவு…!!

சாதி, மதம், பாலினம் மற்றும் பிறப்பிடம் ஆகியவை குறித்து எந்தவொரு நபரும் வீணாகப் பெருமிதம் கொள்ளத் தேவையில்லை எனப் பிரபல…

20 minutes ago

ஷாக்… நடிகை சர்ச்சையின் பின்னணியில் சதித்திட்டமா?… அரசியல் நாடகமா?… எம்.பி. அப்துல்லாவின் பதிவு… அரசியலில் பரபரப்பு…!

தஞ்சாவூரில் காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பான திமுக ஆர்ப்பாட்டத்தில், நடிகை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக எழுந்த புகாரின்…

21 minutes ago