காதல் மனைவி ஷாலினியின் பிறந்த நாளுக்கு அஜித் கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட்.. அப்படி என்ன கொடுத்தார் தெரியுமா..?

Spread the love

தமிழ் திரை உலகில் தோல்வியே சந்திக்காத நடிகை என்றால் அது ஷாலினியாக தான் இருக்க முடியும். இவர் தமிழில் நடித்தது வெறும் ஐந்து படங்கள் மட்டும் தான். அந்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்களாக அமைந்ததால் ஜீரோ பிளாப் நாயகியாக வலம் வருகின்றார். அது மட்டுமல்லாமல் ஐந்து படங்களில் தொடர் வெற்றியை கொடுத்த ஷாலினி முன்னணி நடிகையாக இருந்த போதே நடிகர் அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு மற்ற நடிகைகளை போல இவரும் சினிமாவை ஒட்டுமொத்தமாக ஓரம் கட்டினார். கடந்த 22 ஆண்டுகளாக ஷாலினி ஒரு திரைப்படத்தில் கூட தலை காட்டவில்லை.

இருந்தாலும் அவருடைய திரைப்படங்கள் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. அந்த அளவிற்கு சினிமாவில் குறுகிய காலத்தில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர். அஜித்துடன் அமர்க்களம் திரைப்படத்தில் நடித்த போது அவர் மீது காதல் வயப்பட்ட ஷாலினி கடந்த 2000 ஆம் ஆண்டு அவரை குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

அஜித் மற்றும் ஷாலினி தம்பதிக்கு திருமணமாகி கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஆனாலும் அவர்கள் இன்றளவும் அதே காதலோடு தான் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகை ஷாலினி சமீபத்தில் தனது 44 வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அதே சமயம் ஷாலினி தன்னுடைய பிறந்தநாளை தனது தங்கை, தம்பி மற்றும் தனது மகன் மகளுடன் கொண்டாடினார்.

அஜித் தற்போது வெளிநாட்டில் இருப்பதால் அவரால் ஷாலினியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. இருந்தாலும் தன்னுடைய மனைவிக்கு சர்ப்ரைஸ் ஆக ஒரு விலை உயர்ந்த பரிசை கொடுத்துள்ளார். அதாவது தனக்கு பிடித்த லெக்சஸ் காரை தன்னுடைய மனைவி ஷாலினிக்கு அஜித் பரிசாக கொடுத்து அசத்தியுள்ளார். அதே சமயம் அந்த காரின் மதிப்பு சுமார் 69 லட்சம் எனவும் கூறப்படுகிறது.

Nanthini

Recent Posts

தமிழகத்தில் மீண்டும் கொடூரம்.. 61 வயது மூதாட்டி கூட்டுப்பாலியல் வன்கொடுமை… பயங்கர அதிர்ச்சி..!!

சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…

6 மணத்தியாலங்கள் ago

BREAKING: உடனே மூடுங்க.. முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு…!!

மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…

7 மணத்தியாலங்கள் ago

FLASH: அரசு எச்சரிக்கையை மீறி கூடுதல் கட்டணம் வசூல்… டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடி கைது..!!

மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…

7 மணத்தியாலங்கள் ago

BREAKING: “சிங்கப்பெண் அதிரடிப்படை” திட்டத்தின் தொடக்க விழா ரத்து…!!

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…

7 மணத்தியாலங்கள் ago

வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் வீதிமன்றப் போராட்டம்..! புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு.. அரசு ஊழியர்கள் சங்கம் கெடு…!!

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…

8 மணத்தியாலங்கள் ago

அரசியலை கடந்த பாசம்..! சீமான் வீட்டுக்கு அண்ணனாகச் சீர் கொண்டு சென்ற அனிதா ராதாகிருஷ்ணன்..! நெகிழ வைக்கும் பின்னணி…!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…

8 மணத்தியாலங்கள் ago