தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அஜித். தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த போது அவருக்கு வெற்றி படத்தைக் கொடுத்தவர் இயக்குனர் வசந்த். அவர் இயக்கிய ஆசை திரைப்படம்தான் அஜித்தின் முதல் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது.
அதன் பிறகு காதல் மன்னன், வாலி, அமர்க்களம் மற்றும் முகவரி என அடுத்தடுத்து ஹிட் படங்களாகக் கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். ஆனால் அவரை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக்கியது முருகதாஸின் தீனா திரைப்படம்தான். அந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பின்னர் ஆக்ஷன் பாதையில் அஜித் பயணப்பட்டார்.
அதன் பின்னர் அவர் நடித்த அனைத்துப் படங்களும் ஆக்ஷன் மசாலாப் படங்கள்தான். இடையில் அவருக்கு சில ஆண்டுகள் சறுக்கல்கள் இருந்தாலும் 2007 ஆம் ஆண்டு வெளியான பில்லா திரைப்படம் அவரை மாஸ் மகாராஜா ஆக்கியது. அதன் பின்னர் அவர் படங்களில் நடிப்பதைக் கணிசமாகக் குறைத்துக்கொண்டு ஆண்டுக்கு ஒரு படம் அல்லது இரண்டு ஆண்டுக்கு ஒரு படம் என்ற விகிதத்தில்தான் நடித்து வருகிறது.
தமிழ் சினிமாவில் உருவாக்கப்பட்ட ஸ்டைலிஷான படங்களில் ஒன்று என பில்லா படம் பற்றி ரசிகர்கள் இப்போதும் வியந்தோதுவார்கள். அந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஜினிகாந்தின் இன்னொரு சூப்பர்ஹிட் படமான “தீ” படத்தின் ரீமேக்கிலும் அஜித் நடிக்க ஆசைப்பட்டாராம்.
தீ படத்தில் ரஜினி கதாநாயகனாகவும் சுமன் அவரின் தம்பியாகவும் நடித்திருப்பார்கள். ஆனால் அந்த படத்தின் ரீமேக்கில் அண்ணன், தம்பி என இருக் கதாபாத்திரங்களில் தானே நடிக்கலாம் என்றெல்லாம் அஜித் ஆசைப்பட்டுள்ளார். ஆனால் ஏனோ சில காரணங்களால் அந்த படம் மேற்கொண்டு நடக்கவில்லை. அதன் பின்னர் அந்த ரீமேக் கலாச்சாரமும் செயலிழந்து போய்விட்டதால் இனிமேலும் அஜித் அந்த படத்தில் நடிக்க வாய்ப்பில்லை.
மும்பையில் ஊபர் ஓட்டுநர் ஒருவருக்கும், ஷிவானி என்ற பெண் பயணிக்கும் இடையே கூடுதல் கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறு மற்றும்…
ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்டீல் பிளாண்ட் குடியிருப்பில் வசிக்கும் ஒரு குடும்பத்தினருக்கு, தங்களது வீட்டின் கழிவறையிலிருந்து வினோதமான…
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள ராணுவ விமானப் பயிற்சிப் பள்ளியில், பயிற்சி நிறைவு விழாவின் போது கேப்டன் பரத் பரத்வாஜ்…
தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட விவகாரத்தில், அங்கு பணிபுரிந்து வந்த ஒப்பந்த ஊழியரான கோபிநாத் என்பவரை…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்டத்தின் பிகாபூர் பகுதியில் நெஞ்சை உலுக்கும் சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தாருண் விகாஸ்…
மின்துறை டெண்டர்களில் கடந்த காலங்களில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறவில்லை என்றும், தற்போதைய மின்வெட்டுப் பிரச்னையை திசை திருப்புவதற்காகவே 20 லட்சத்திற்கும்…