டூப் இல்லாமல் ரிஸ்க், மயிரிழையில் உயிர்தப்பிய அஜித்…. லைக்கா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

By Deepika

Published on:

துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித் நடித்து வரும் படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடித்து வருகின்றனர். இந்தப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்றது. முதல் ஷெடியூல் முடிந்துள்ள நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகி உள்ளது.

Ajith in car chasing scene

ஆனால் அதற்கு முன்பாக தன் நண்பர்களுடன் சேர்ந்து பைக் ரைட் சென்று வந்தார் அஜித். இதில் விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் ஆரவும் சென்றார். இந்தநிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ள நிலையில், தயாரிப்பு நிறுவனம் நெஞ்சை பதறவைக்கும் ஷூட்டிங் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளனர்.

   
Ajith in car chasing scene

நடிகர் அஜித்தும் ஆரவும் கார் சேசிங் காட்சியில் நடித்துள்ளனர். அந்த ஆக்சன் காட்சியில் பாடி டபுள் என சொல்லப்படும் டூப் பயன்படுத்தாமல், அஜித்தே அந்த ரிஸ்கான காட்சியை நடித்துள்ளார். அப்போது அஜித்தின் கார் கட்டுப்பாட்டை இழந்து கடுமையான விபத்தில் சிக்கியுள்ளது. அதிர்ஷ்டவசமாக இருவரும் தப்பியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் எதுக்கு தல இவ்வளவு ரிஸ்க். இதெல்லாம் வேண்டாம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

author avatar
Deepika