#image_title
“அமராவதி” என்ற படம் மூலம் அறிமுகமான அஜித்குமார், சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் ஆரம்பத்தில் சரியான படங்கள் அமையாமல் தடுமாறிய காலமும் உண்டு. இதனையடுத்து தட்டுத்தடுமாறிக்கொண்டிருந்த அஜித்துக்கு ஆசை படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்தது. அதன் பிறகு வாலி, காதல் கோட்டை, காதல் மன்னன் என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்தார் அஜித். இப்படி வரிசையாக ஹிட் படங்களை கொடுத்துக்கொண்டிருந்தாலும் ஒருபக்கம் தனது தீராத ஆசையான பைக் ரேஸிலும் கவனம் செலுத்திவந்தார் அஜித்.
#image_title
இதனால் அவர் சினிமாவில் நிலைப்பாரா இல்லையா என்ற கேள்வியும் பலரிடமும் எழுந்தது. அதுமட்டுமின்றி பைக் ரேஸ் உள்ளிட்டவைகளால் அஜித் விபத்தையும் சந்தித்துவந்தார். அப்படி ஒரு விபத்தில் சிக்கி சிகிச்சையில் இருந்தபோதுதான் அவருக்கான 25ஆவது படம் அமைந்தது. அஜித்தின் 25ஆவது படமாக அமைந்தது அமர்க்களம். அந்தப் படத்தை இயக்கியவர் ஏற்கனவே அஜித்தை வைத்து காதல் மன்னன் என்ற மெகா ஹிட்டை இயக்கிய சரண். சிகிச்சையிலிருந்து மீண்டு வந்த அஜித் அமர்க்களம் படத்தில் நடித்தார். அவருடன் ஷாலினி, ரகுவரன் உள்ளிட்டோரும் நடித்தனர். அதுவரை பக்கா கமர்ஷியல் படம் அஜித்துக்கு கிடைக்காமல் இருந்த சூழலில் அமர்க்களம் படம் அந்தக் குறையை தீர்த்துவைத்தது எனலாம்.
#image_title
இந்தப் படத்தில் நடித்தபோது அஜித்துக்கும், ஷாலினிக்கும் காதல் ஏற்பட்டு பின்னாளில் திருமணமும் செய்து கொண்டனர். இந்நிலையில் காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், அசல் என அஜித்தை வைத்து நான்கு படங்களை இயக்கினார் சரண். அமர்க்களம் படத்தில் நடிப்பதற்காக அஜித்திற்கு அட்வான்ஸாக ஒரு தொகை செக்காக கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் இன்று வரையிலும் அந்த செக்கை அவர் பணமாக மாற்ற வில்லையாம். அதேப் போல் படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில், அப்படத்தில் நடித்ததற்காக ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லையாம் அஜித். கடந்த படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை இப்படத்தின் மூலம் சரிகட்டுவதாக கூறி சம்பளம் வாங்க மறுத்துவிட்டதாக இயக்குநர் சரண், ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.
#image_title
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…