Categories: சினிமா

விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் பாதிக்கப்பட்டதற்கு அஜித்தும் ஒரு காரணமா?… அட என்னங்க சொல்றீங்க?

Spread the love

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த போது அவருக்கு வெற்றி படத்தைக் கொடுத்தவர் இயக்குனர் வசந்த். அவர் இயக்கிய ஆசை திரைப்படம்தான் அஜித்தின் முதல் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது.

அதன் பிறகு காதல் மன்னன், வாலி, அமர்க்களம் மற்றும் முகவரி என அடுத்தடுத்து ஹிட் படங்களாகக் கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். ஆனால் அவரை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக்கியது முருகதாஸின் தீனா திரைப்படம்தான். அந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பின்னர் ஆக்‌ஷன் பாதையில் அஜித் பயணப்பட்டார்.

90 களில் சாக்லேட் பாயாக வலம் வந்த அஜித் பல காதல் படங்களில் நடித்து பெண்களின் ஆசைநாயகனாக இருந்தார். தீனா படம்தான் அவரை முழுமையாக ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றியது. அதன் பின்னர் அவர் நடித்த அனைத்துப் படங்களும் ஆக்‌ஷன் மசாலாப் படங்கள்தான்.

தற்போது அவர் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் விடாமுயற்சி படம் பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அந்த படத்தின் ரீமேக் உரிமையை முறையாகப் பெறாமலேயே படமாக்கி விட்டதாக சொல்லப்படுகிறது. தற்போது லைகா நிறுவனத்துக்கு பிரேக்டவுன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான பேரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் தொகை கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இது சம்மந்தமாக லைகா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை. அதனால்தான் பொங்கலுக்கு ரிலீஸாகவிருந்த விடாமுயற்சி திரைப்படம் திடீரென்று தள்ளிவைக்கப்பட்டுள்ளது என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் பிரேக்டவுன் படத்தை ரீமேக் செய்யலாம் என்ற ஐடியாவைக் கொடுத்ததே அஜித் தானாம். அதனால்தான் இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் பிள்ளையார் சுழி போட்டதே அஜித்தான் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் அவர் அப்படி சொல்லியிருந்தாலும் ஒரு தயாரிப்பு நிறுவனம் முறைப்படி உரிமையை முன்பே பெற்றிருந்தால் இப்படி ஒரு சிக்கல் வந்திருக்காது எனவும் ரசிகர்கள் லைகா மேல் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

vinoth

Recent Posts

தினமும் 13 பாட்டில்” கல்லீரல் அழுகிய நிலையிலும் விடாத அந்த பழக்கம்… கலாபவன் மணியின் மரணத்தின் பின்னணியில் பகீர் உண்மை.!

கேரளத் திரையுலகில் ஆட்டோ ஓட்டுநராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி, மிமிக்ரி கலைஞராகவும், பின் தேசிய விருது பெற்ற நடிகராகவும் உயர்ந்தவர்…

2 minutes ago

மொத்தப் பெயரையும் கெடுத்துட்டாங்க.. இனி அந்தப் பக்கம் தலைவைத்துக் கூட படுக்கமாட்டேன்… உயிருக்கு பயந்து நடுங்கிய நடிகை.. பகீர் கிளப்பும் ரகசியங்கள்..!!

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு முறை போட்டியாளராகப் பங்கேற்ற நடிகை ஹரிதேஜா, அண்மையில் அளித்த பேட்டியொன்றில் தனக்கு ஏற்பட்ட கசப்பான…

5 minutes ago

“வாழ்த்து சொன்ன அடுத்த நொடியே மரண அடி” சூர்யகுமாருக்கு குழந்தை பிறந்ததற்கு விஷ் செய்த கோலி… அப்புறம் செஞ்ச காரியம் தான் ‘பகீர்’ ட்விஸ்ட்..!!

சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்ய களம் இறங்கியபோது, அவருக்குக் குழந்தை பிறந்த மகிழ்ச்சியான செய்திக்காக விராட் கோலி முதலில் தனது…

5 minutes ago

“நீ எங்கிருந்தாலும் என் தம்பிடா” மும்பையை கதறவிட்ட குருணால் பாண்டியா… ஆட்டம் முடிந்ததும் பொல்லார்டை கட்டிப்பிடித்து அழுதது ஏன்..? வைரல் வீடியோ..!!

ராய்ப்பூரில் நடைபெற்ற இந்தத் திரில் வெற்றிக்குப் பிறகு, ஆர்சிபி வீரர் குருணால் பாண்டியா தனது பழைய அணியான மும்பை இந்தியன்ஸின்…

8 minutes ago

காலையிலேயே ஸ்டாலின், எடப்பாடிக்கு ஷாக்… அதிமுக, திமுக கூடாரங்களை காலி செய்யும் கே.ஏ.எஸ்… தவெக-வில் குவியும் முக்கிய புள்ளிகள்…!

கொங்கு மண்டல அரசியலில் பெரும் அதிரடியாக, திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்…

9 minutes ago

“இது கிங் கோலி சாம்ராஜ்யம்” எவனும் அசைக்க முடியாது… கடைசி பந்தில் த்ரில் வெற்றி… விராட் கோலி செய்த வெறித்தனமான கொண்டாட்டம்.. வைரலாகும் வீடியோ..!!

ராய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் 2026 லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடைசி…

12 minutes ago