Categories: சினிமா

பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த பான் இந்தியா திரைப்படத்தை மிஸ் பண்ண விதார்த்.. அவர் மட்டும் நடிச்சிருந்தா..?

Spread the love

தமிழ் சினிமாவில் தன்னுடைய இயல்பான நடிப்பால் பல நல்ல படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருபவர் தான் நடிகர் விதார்த். இவர் முதன் முதலில் கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டப்பட்டது. குறைவான படங்களில் நடித்திருந்தாலும் அந்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக இவர் நடித்த அஞ்சாமை, ஆயிரம் பொற்காசுகள் மற்றும் அன்பளிப்பு போன்ற பல திரைப்படங்கள் ரசிகர்களை கொண்டாட வைத்தது. படங்களில் நடிப்பதை தாண்டி தற்போது வெப் சீரிஸ்களிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். சினிமாவைப் பற்றி இவருடைய பொதுவான கருத்து திறமைசாலிகளுக்கு இங்கு இடமில்லை என்பதுதான்.

பெரிய பெரிய இயக்குனர்கள் பெரிய நடிகர்களை பார்த்து தான் ஓடுகிறார்கள் எனவும் தன்னை போன்ற சின்ன நடிகர்களை கண்டு கொள்வதே இல்லை என்றும் அவர் பலமுறை கூறியுள்ளார். அவர் சொல்வதைப் போல சமீப காலமாக சின்ன சின்ன பட்ஜெட் திரைப்படங்கள்தான் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கின்றன. பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட சூப்பர் ஹீரோக்களின் படங்கள் பல வசூலில் மண்ணை கவ்வி உள்ளது. அதனால் எத்தனை கோடி தயாரிப்பாளர்களுக்கு கஷ்டமானது என்பதை அனைவரும் அறிந்திருப்போம். இப்படியான நிலையில் விதார்த் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி படங்களாக அமைந்திருந்தாலும் அவரை இந்த சினிமா கண்டு கொள்வது இல்லை என்பது தான் உண்மை.

இருந்தாலும் தனக்கு ஏற்ப நல்ல கதைகள் வரும்போது அதனை பயன்படுத்தி விதார்த் சினிமாவில் முன்னேறி வருகிறார். இப்படியான நிலையில் சுதீப் நடிப்பில் கன்னடம் மற்றும் தமிழ் என பால் இந்தியா திரைப்படமாக வெளியான படம் தான் மேக்ஸ் திரைப்படம். இது கன்னடத்தில் பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் கதையை இயக்குனர் கலைப்புலி தாணுவிடம் கூறிய போது விதார்த் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார். ஆனால் தானு தன்னிடம் சுதீப் கால் சூட் இருக்கிறது அவரை இந்த படத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சொன்னதின் பெயரில்தான் இந்த மேக்ஸ் திரைப்படத்தில் சுதீப் நடித்துள்ளார். இல்லையென்றால் இந்த பான் இந்தியா திரைப்படத்தில் விதார்த் தான் ஒப்பந்தமாகி இருப்பாராம்.

Nanthini

Recent Posts

ரயில் பயணிகளுக்குப் பகீர்! – ஏறிய ஸ்டேஷன் மாறியதால் ரூ.2,650 அபராதம்: டிடிஇ எடுத்த அதிரடி நடவடிக்கை!

இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…

9 மணத்தியாலங்கள் ago

“இதெல்லாம் சாத்தியமா?” – கொச்சியில் இருந்து ஜெய்சால்மருக்கு ஆட்டோவில் சென்ற வெளிநாட்டவர்கள்.. மிரளவைக்கும் பயணம்..!!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…

9 மணத்தியாலங்கள் ago

“இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்?” ஒரு காலத்துல சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம்.. முதல்வர் மகனைப் பார்த்து கண் கலங்கிய தந்தை எஸ்.ஏ.சி..!!

"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…

10 மணத்தியாலங்கள் ago

“பேட்” கேட்டது குற்றமா..? ஆடை கறையோடு ஒரு மணி நேரம் வெளியே நிற்க வைக்கப்பட்ட மாணவி.. பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்..!!

பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…

10 மணத்தியாலங்கள் ago

“சொன்னபடியே கொன்றுவிட்டேன்” ரேப் கேஸ் போடாத.. கொலை கேஸ் போடு.. காதலிக்கு மரண தண்டனை கொடுத்த கொடூரக் காதலன்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…

10 மணத்தியாலங்கள் ago

விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மு.க அழகிரியின் மகள்… அதிர்ச்சியில் திமுக..!!

தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…

10 மணத்தியாலங்கள் ago