சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் மனோஜ் பணத்தை ஏமாற்றியவரை பற்றி மீனாவும் முத்துவும் க்ளூ கண்டுபிடித்து அண்ணாமலை இடம் கூறுகிறார்கள். ஆனால் ரோகிணி இனிமேல் இவர்கள் தேட வேண்டாம் என்று கூறுகிறார். அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது.
இன்றைய எபிசோடில் ரோகிணி இதுவரையிலும் நீங்கள் தேடுனது போதும் இனிமேல் நாங்க தேடி கண்டுபிடிச்சுக்கிறோம் என்று முத்து மீனாவிடம் கூறுகிறார். உடனே முத்து கோபப்பட்டு பாத்தியப்பா இவங்க பண்ற வேலையை முதல் நாளே நான் தேடப் போகும்போது வேண்டான்னு சொல்லி இருக்க வேண்டியதுதானே என்று கேட்கிறார். உடனே அண்ணாமலையும் ரோகிணியிடம் ஏம்மா இப்படி சொல்ற முத்து வந்து கார் ஓட்டுகிறான் அவனுக்கு நிறைய பேர் பழக்கம் இருக்கும் கண்டுபிடித்துவிடுவான்ல என்று கேட்கிறார்.
உடனே ரோகிணி இல்ல அன்கிள் வேண்டாம் இது எங்களோட பணம் நாங்க தொலைச்சத நாங்களே கண்டுபிடிச்சுக்கிறோம். இப்ப இவர் வந்து அவங்க வேலையை விட்டுட்டு பண்றேன்னு சொல்றாங்க அவங்களுக்கு சிரமம் வேண்டான்னு நான் நினைக்கிறேன். அது மட்டும் இல்லாம பணத்தை கண்டுபிடித்துவிட்டால் ஆயுசுக்கும் மனோஜை மட்டம் தட்டிக்கிட்டே இருப்பாங்க என்று கூறுகிறார்.
உடனே முத்து நீ சொன்ன ஒரு வார்த்தைக்கு தான் பா நாங்க ரெண்டு பேரும் போய் தேடி அலைஞ்சோம். இனிமேல் அவங்க பார்த்துக்கிடட்டும் ஆனா ஒன்னே ஒன்னு பணம் கைக்கு வந்ததுக்கு அப்புறம் இங்க பொதுவுல வரணும். அந்த ஜீவாகிட்ட பணம் வாங்கிட்டு கமுக்கமா ஏமாத்துன மாதிரி மறுபடியும் ஏமாற்றக்கூடாது பணத்தை உன் கையில வந்து கொடுக்கணும் அதை மட்டும் நீ சொல்லிரு என்று சொல்லிவிட்டு நாங்க எங்க வேலையை பார்க்க போறோம் என்று சென்று விடுகின்றனர்.
ரோகினி பணத்தை கண்டுபிடிக்க புது திட்டம் தீட்டுகிறார். நேராக வித்யா வீட்டிற்கு செல்கிறார். சென்று விவரத்தை கூறி நான் சிட்டிய வச்சு தான் பணத்தை கண்டுபிடிக்க போறேன் அப்படின்னு சொல்லிட்டு கூட்டி செல்கிறார். பொதுவான ஒரு இடத்தில் வைத்து சிட்டியை சந்திக்கிறார். வித்யா எதுக்கு என்று கேட்டதற்கு நான் ஆபீஸ்க்கு போனா அது பிரச்சினையாகும் ஏற்கனவே நான் சிட்டிட்ட கடன் வாங்குனது மனோஜ்க்கு தெரிஞ்சு போச்சு அந்த முத்து போட்டு கொடுத்துட்டான் என்று கூறுகிறார்.
சிட்டி வருகிறார். அவரிடம் ரோகினி விவரத்தை கூறி அந்த கோவிலில் சிசிடிவி இருக்கும் அதுல அவங்க போட்டோவை எடுத்து எனக்கு நீ எப்படியாவது அந்த ஆள கண்டுபிடிச்சு என் பணத்தை வாங்கி தரணும் அப்படி வாங்கி தந்துட்டா நீ கேக்குற பணத்தை நான் கொடுக்கிறேன் என்று ரோகினி டீல் பேசுகிறார். சிட்டியும் சரி என்று செல்கிறார். அடுத்ததாக வீட்டில் முத்துவும் மீனாவும் ஜாலியாக பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது மீனா எதுக்கு இப்படி ரோகிணி வேண்டான்னு சொல்லிட்டாங்க என்று கேட்கும் போது அது நமக்கு என்ன தெரியும் ஆனா இந்த பார்லர் அம்மா சாதாரண ஆள் கிடையாது அது ஏதோ பெரிய திட்டத்தை வச்சுட்டு தான் நம்மள கண்டுபிடிக்க வேண்டாம் என்று சொல்லிருக்கு என்று முத்து கூறுகிறார்.
பிறகு முத்து மீனாவிடம் நீ ஒரு டெக்கரேஷன் பண்ணதுக்கு ஆர்டர் வாங்கி இருக்கேன்ல எப்படி பண்ண போற என்று கேட்கிறார். உடனே மீனா நல்ல பெருசா பண்ணனும் லாபத்தை எதிர்பார்க்காம நம்ம பேர சொல்ற மாதிரி நல்லா பண்ணி கொடுக்கணும்னு இருக்கேன் என்று கூறுகிறார். உடனே முத்து மீனாவை பாராட்டுகிறார். பரவாயில்லையே நீ கூட பிசினஸ் யுக்தியெல்லாம் கண்டுபிடிச்சு பேர் நிக்கணும்னு பிளான் பண்ணி செய்றியே என்று சொல்கிறார். அடுத்ததாக சிட்டி கோவிலில் போய் எனக்கு சிசிடி ஃபுட்டேஜ் வேணும் எனக்கு இந்த மீனா அவங்க அம்மா எல்லாம் எனக்கு நல்லா தெரியும். ஒரு கேஸ் விஷயமா உங்களை அந்த ஆளை தேடி வந்திருக்கும் அதனால எங்களுக்கு வேணும் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.
கேரளத் திரையுலகில் ஆட்டோ ஓட்டுநராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி, மிமிக்ரி கலைஞராகவும், பின் தேசிய விருது பெற்ற நடிகராகவும் உயர்ந்தவர்…
தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு முறை போட்டியாளராகப் பங்கேற்ற நடிகை ஹரிதேஜா, அண்மையில் அளித்த பேட்டியொன்றில் தனக்கு ஏற்பட்ட கசப்பான…
சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்ய களம் இறங்கியபோது, அவருக்குக் குழந்தை பிறந்த மகிழ்ச்சியான செய்திக்காக விராட் கோலி முதலில் தனது…
ராய்ப்பூரில் நடைபெற்ற இந்தத் திரில் வெற்றிக்குப் பிறகு, ஆர்சிபி வீரர் குருணால் பாண்டியா தனது பழைய அணியான மும்பை இந்தியன்ஸின்…
கொங்கு மண்டல அரசியலில் பெரும் அதிரடியாக, திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்…
ராய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் 2026 லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடைசி…