தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த போது அவருக்கு வெற்றி படத்தைக் கொடுத்தவர் இயக்குனர் வசந்த். அவர் இயக்கிய ஆசை திரைப்படம்தான் அஜித்தின் முதல் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது.
அதன் பிறகு காதல் மன்னன், வாலி, அமர்க்களம் மற்றும் முகவரி என அடுத்தடுத்து ஹிட் படங்களாகக் கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். ஆனால் அவரை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக்கியது முருகதாஸின் தீனா திரைப்படம்தான். அந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பின்னர் ஆக்ஷன் பாதையில் அஜித் பயணப்பட்டார்.
90 களில் சாக்லேட் பாயாக வலம் வந்த அஜித் பல காதல் படங்களில் நடித்து பெண்களின் ஆசைநாயகனாக இருந்தார். தீனா படம்தான் அவரை முழுமையாக ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியது. அதன் பின்னர் அவர் நடித்த அனைத்துப் படங்களும் ஆக்ஷன் மசாலாப் படங்கள்தான்.
தற்போது அவர் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் விடாமுயற்சி படம் பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அந்த படத்தின் ரீமேக் உரிமையை முறையாகப் பெறாமலேயே படமாக்கி விட்டதாக சொல்லப்படுகிறது. தற்போது லைகா நிறுவனத்துக்கு பிரேக்டவுன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான பேரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் தொகை கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இது சம்மந்தமாக லைகா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை. அதனால்தான் பொங்கலுக்கு ரிலீஸாகவிருந்த விடாமுயற்சி திரைப்படம் திடீரென்று தள்ளிவைக்கப்பட்டுள்ளது என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் பிரேக்டவுன் படத்தை ரீமேக் செய்யலாம் என்ற ஐடியாவைக் கொடுத்ததே அஜித் தானாம். அதனால்தான் இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் பிள்ளையார் சுழி போட்டதே அஜித்தான் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் அவர் அப்படி சொல்லியிருந்தாலும் ஒரு தயாரிப்பு நிறுவனம் முறைப்படி உரிமையை முன்பே பெற்றிருந்தால் இப்படி ஒரு சிக்கல் வந்திருக்காது எனவும் ரசிகர்கள் லைகா மேல் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.