மீண்டும் இணையும் தனுஷ் ஐஸ்வர்யா தம்பதி ; இதுதான் காரணமா ? ரகசியம் சொல்லும் பயில்வான் ரங்கநாதன்

By Deepika

Updated on:

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சாதாரண நடிகராக இருந்த தனுஷ் சூப்பர்ஸ்டாரின் மருமகனான பின்னர் வெற்றியும் அவர் பக்கம் வந்தது. தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி படங்களிலும் நடித்து வந்தார். ஐஸ்வர்யா தனுஷும் திரைப்பட இயக்குனராக உள்ளார்.

Aishwarya and dhanush

இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். ஐஸ்வர்யா தனுஷை வைத்து 3 என்ற படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார். அதன்பின் வை ராஜா வை என்ற தோல்வி படத்தை கொடுத்ததால் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். தனுஷா பாலிவுட், ஹாலிவுட் என வெற்றி மேல் வெற்றி கண்டு வந்தார். இந்த நிலையில் திடீரென இந்த தம்பதி பிரிவதாக செய்தி வெளியிட்டார்கள். அதன்பின் லால் சலாம் என்ற வெற்றி படத்தை கொடுத்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

   
Aishwarya and dhanush

கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்த இவர்கள், மீண்டும் இணையப்போவதாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார், அவர் கூறியுள்ளதாவது, தனுஷ் ஐஸ்வர்யா பிரிந்து இருந்தாலும் விவாகரதுக்கு பதியாமல் இருந்து வந்தனர். பிரிய போவதாக இவர்கள் கூறியது ரஜினிக்கு அவரது மனைவி லதாவுக்கு பெரிய இடியாக இருந்தது. 18 வருடங்கள் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிய போகிறார்களே என ரஜினி துடித்து போனார். அதேபோல் யாத்ரா, லிங்காவும் மனம் தளர்ந்து போனார்கள்.

Dhanush and aishwarya

யாத்ரா, லிங்கா இருவரும் பெற்றோர்கள் இருவரிடமும் மாறி மாறி இருந்து வருகிறார்கள். தனுஷ் பற்றி எங்கேயும் வாய் திறக்காத ஐஸ்வர்யா சமீபகாலமாக தனுஷ் பற்றி நல்ல விதமாக பேசி வருகிறார். அதுமட்டுமல்ல பிள்ளைகளுக்காகவும், பெற்றோர்களுக்கவும் மீண்டும் இந்த தம்பதி சேர்ந்து வாழ போகிறார்கள், சீக்கிரம் இதுகுறித்து அவர்கள் தெரிவிப்பார்கள் என கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

author avatar
Deepika