ஆளுநரிடம் ஓடிய இ.பி.எஸ்… அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு ‘செக்’.. அதிரடிப் புகார் பின்னணி என்ன?… பரபரக்கும் அரசியல் களம்…!!!

Spread the love

தமிழகச் சட்டசபைத் தேர்தல் முடிவுகளின் எதிரொலியாக அதிமுகவில் மீண்டும் ஒரு பிளவு ஏற்பட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பின்னால் 22 எம்எல்ஏ-க்களும், சிவி சண்முகம் மற்றும் எஸ்பி வேலுமணி தலைமையிலான அதிருப்தி அணியில் 25 எம்எல்ஏ-க்களும் திரண்டுள்ளனர். இதில் எஸ்பி வேலுமணி தரப்பு தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) ஆதரித்ததால், தவெக ஆட்சியை ஆதரித்த 17 மாவட்டச் செயலாளர்களின் பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்துள்ளார். இந்த அதிரடி நடவடிக்கையால் அதிமுகவில் உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

தற்போது சிவி சண்முகம் மற்றும் எஸ்பி வேலுமணி ஆகியோர் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்துத் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுகவில் மீண்டும் சசிகலா மற்றும் டிடிவி தினகரனை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பலமாக எழுந்துள்ள நிலையில், இரு தரப்பும் சட்டசபைக் குழு தலைவர் மற்றும் கொறடா பதவி தொடர்பாகச் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் முறையிட்டு கடிதங்களை அளித்துள்ளனர். இந்த விவகாரத்தில் சபாநாயகர் 90 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் உள்ள நிலையில், அவர் ஒருதலைபட்சமாகச் செயல்படுவதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு குற்றம்சாட்டி வருகிறது.

சபாநாயகர் மீதான அதிருப்தி காரணமாக, எடப்பாடி பழனிசாமி தரப்பு தற்போது ஆளுநர் அர்லேகரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளது. அதன்படி ஆர்பி உதயகுமார், கேபி முனுசாமி, ஓஎஸ் மணியன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஆளுநர் மாளிகைக்குச் சென்று புகார் கடிதம் அளிக்க உள்ளனர். ஆளுநர் தற்போது கேரளாவில் இருப்பதால், அவரது தனிச் செயலாளரிடம் இந்தக் கடிதம் ஒப்படைக்கப்பட உள்ளது. சபாநாயகரின் செயல்பாடுகள் மற்றும் கட்சித் தாவல் தொடர்பான விவகாரங்களில் ஆளுநர் தலையிட்டு விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்பதே எடப்பாடி அணியின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

குறிப்பாக, அதிமுகவின் அதிருப்தி எம்எல்ஏ-க்களை அமைச்சர்களாக நியமிக்கக் கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக உள்ளார். ஆட்சியமைக்கத் துடிக்கும் தவெக போன்ற கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கும் எம்எல்ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், சட்டசபை விதிகளின்படி எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் எடப்பாடி தரப்பு சட்டப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. அதிமுகவின் இந்தத் திடீர் பிளவு தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

டிடிவி தினகரனுக்கு அடுத்த ஷாக்..! செய்தித் தொடர்பாளர் அபுதாஹிர் திடீர் ராஜினாமா.. பெரும் பரபரப்பு..!!

தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு ஆதரவாக சட்டமன்றத்தில் பேசியதற்காக, மன்னார்குடி தொகுதி அமமுக எம்.எல்.ஏ எஸ். காமராஜை கட்சியின்…

24 seconds ago

பகீர் சம்பவம்.. டெல்லியில் மீண்டும் ஒரு நிர்பயா கொடூரம்..! ஓடும் பேருந்தில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. நாடே அதிர்ச்சியில் …!!

டெல்லியில் உள்ள சராய் காலே கான் பகுதியில், பேருந்து ஒன்றில் இளம்பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது பெரும்…

3 minutes ago

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் அதிரடி மாற்றம்.. இனி இவர்களுக்கு கிடைக்காது… முழு விவரம் இதோ..!!

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வந்த 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை…

5 minutes ago

தோல்விக்கு நானே பொறுப்பு… சூரியன் மீண்டும் உதித்தே தீரும்.. ஸ்டாலின் உருக்கம்.!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், சமீபத்திய தேர்தல் முடிவுகள் குறித்து…

16 minutes ago

இதுதான் நீங்க சொன்ன மாற்றமா..? மகளிர் உரிமைத் தொகை விவகாரத்தில்.. முதல்வர் விஜய்யின் தாமதத்திற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

மே மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்துவதற்கு முன்னதாக, இத்திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய கால…

17 minutes ago

துரோகத்தின் உச்சம்!.. “என் கூடவே இருந்துட்டு இதையா செஞ்ச?”… நண்பன் மனைவியுடன் கள்ளக்காதல்… ஆத்திரத்தில் நண்பன் செய்த வெறிச்செயல்… பதறவைக்கும் பின்னணி…!!!

ஜோலார்பேட்டையை அடுத்த ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் திருப்பதியில் பானிபூரி கடை நடத்தி வரும் அஜித்குமார் ஆகிய இருவரும்…

20 minutes ago