விட்டு மனையில் கடை இருக்கிறதா? இனி கூடுதல் கட்டணம் கிடையாது!… பதிவுத்துறை வெளியிட்ட அதிரடி புதிய விதிமுறை..!!!

Spread the love

தமிழகப் பதிவுத்துறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், பொதுமக்கள் எளிதில் சொத்து பரிமாற்றம் செய்யவும் ஏதுவாகப் பதிவுத்துறைத் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் புரட்சிகரமான மாற்றங்களைச் செய்துள்ளார். குறிப்பாக, சொத்து வாங்குபவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வழிகாட்டி மதிப்பு நிர்ணயத்தில் நிலவி வந்த குழப்பங்களைத் தீர்க்க மே 5, 2026 அன்று புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன் மூலம், குடியிருப்புப் பகுதிகளில் உள்ள கடைகள், தொழிற்சாலைகள் அல்லது கல்வி நிறுவனங்கள் விற்பனைக்கு வரும்போது, அவற்றுக்குத் தனியாக அதிகப்படியான வணிக ரீதியிலான மதிப்பை நிர்ணயம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும், அந்தத் தெருவிற்கு ஏற்கனவே உள்ள குடியிருப்பு மதிப்பையே பயன்படுத்தலாம் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

தொழிற்சாலை நிலங்களைப் பொறுத்தவரை, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுக்களால் அங்கீகரிக்கப்பட்ட மதிப்பையே அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மாநகராட்சி மற்றும் நகராட்சி எல்லைக்குள் அமையும் தொழிற்சாலைகளுக்குச் சதுர அடி அடிப்படையில் மதிப்பு நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அதே சமயம், ஒரே சுற்றுச்சுவருக்குள் இயங்கும் பெரிய தொழிற்சாலை வளாகங்களில், கட்டிடம் உள்ள பகுதிக்கு மட்டும் தொழிற்சாலை மதிப்பைக் கணக்கிட்டு, மீதமுள்ள காலி இடங்களுக்கு வழக்கமான வழிகாட்டி மதிப்பையே பயன்படுத்தலாம். கிராமப்புறங்களில் உள்ள கோழிப் பண்ணை, இறால் பண்ணை மற்றும் காற்றாலை போன்றவற்றுக்கு வழிகாட்டியில் உள்ள விவசாய மதிப்பையே தொடர்ந்து பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு சொத்து பல புல எண்களில் அமைந்திருக்கும் போது, அனைத்துப் புல எண்களுக்கும் அதிகபட்ச மதிப்பைச் சுமத்தாமல், அந்தந்த புல எண்களுக்குரிய மதிப்பை மட்டும் கணக்கிட்டால் போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளின் முதல் விற்பனையைப் பொறுத்தவரை, கூட்டு மதிப்பு (Composite Value) நிர்ணயம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நெறிமுறைகளைத் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பதிவு அலுவலர்களும் தவறாமல் பின்பற்ற வேண்டும் எனப் பதிவுத்துறைத் தலைவர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்தப் புதிய தெளிவுரைகள் பொதுமக்களுக்குப் பெரும் நிம்மதியையும் பொருளாதார நன்மைகளையும் வழங்கக்கூடியவை. இனி அதிகாரிகள் தன்னிச்சையாக அதிகப்படியான வழிகாட்டி மதிப்பை நிர்ணயம் செய்ய முடியாது என்பதால், தேவையற்ற கூடுதல் முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக்கட்டணச் சுமை குறையும். இதன் மூலம் சொத்து மதிப்பீட்டில் நிலவி வந்த குழப்பங்கள் நீங்குவதுடன், சார்பதிவாளர் அலுவலகங்களில் தேவையற்ற ஆய்வுகள் மற்றும் காலதாமதமின்றி பொதுமக்கள் தங்கள் பத்திரப்பதிவை விரைவாகவும் வெளிப்படையாகவும் முடித்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Muthu Mani

Recent Posts

“ஐயோ என்னை விட்ருங்க ப்ளீஸ்”… கதறிய 8 வயது சிறுமி… கிராமத்தோடு சேர்ந்து தேடிய… மிருகம் மாட்டிக்கொண்டது எப்படி?… மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…

8 மணத்தியாலங்கள் ago

அம்மாடியோ… நிலநடுக்கத்தின் அறிகுறியா?… திடீரென கொந்தளிக்கும் கிணற்று நீர்… குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மர்ம சம்பவம்…!

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…

8 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… தாய் கதறல்… கூலித் தொழிலாளி பேருந்து மோதி பலி… பாட்னாவில் வன்முறை வெடிப்பு… நெஞ்சை நடுங்கவைக்கும் கொடூரம்…!

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…

8 மணத்தியாலங்கள் ago

“ஆளே இல்லன்னா என்னடா… நாங்க இறங்குனா ஆட்டமே… வேற மாதிரி இருக்கும்”… மைதானத்தை கலக்கிய மாஸ் கேட்ச்… இணையத்தில் வைரல் வீடியோ…!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…

8 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… முகத்தில் மேக்கப்… பெண் வேடத்தில் 3 குழந்தைகளின்… தந்தை தூக்கில் தொங்கிய கொடூரம்… பகீர் பின்னணி…!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…

8 மணத்தியாலங்கள் ago

குஷியோ குஷி… பயிர்க்கடன் முழுவதும்…. சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…

8 மணத்தியாலங்கள் ago