மே மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்துவதற்கு முன்னதாக, இத்திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய கால அவகாசம் தேவைப்படுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். இந்த மறுசீரமைப்புப் பணிகள் முடிந்தவுடன் விரைவில் பணம் வரவு வைக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
முதலமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒரு திட்டத்தைத் தொடர்வதற்கு எதற்காக கால அவகாசம் கோர வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என்று சட்டமன்றத்தில் கூறிவிட்டு, இப்போது தள்ளிப்போடுவது ஏன் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
தேர்தல் வாக்குறுதியின்படி மாதம் 2,500 ரூபாய் வழங்குவதாகக் கூறிவிட்டு, தற்போது வழக்கமாக வழங்கப்படும் 1,000 ரூபாயைக் கூட வழங்காமல் இழுத்தடிப்பதுதான் நீங்கள் சொல்லும் ‘மாற்றமா’ என்று மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் முதலமைச்சரைச் சாடியுள்ளார். வழக்கமாக 15-ம் தேதி வழங்கப்பட வேண்டிய தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மனைவியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவதற்காக, டெல்லியைச் சேர்ந்த ஒருவர் தனது தங்க நகைகளை விற்று ரூ.1.65 லட்சம் மதிப்பிலான…
கேரள மாநிலம் கண்ணூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினரின் அடுத்தடுத்த கைதுகள், அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் பாதுகாப்பு கவலையையும் ஏற்படுத்தியுள்ளன. கண்ணூர்…
தமிழக வெற்றித் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, பல்வேறு அரசுத் துறைகளில் அதிரடி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.…
திமுக ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக விமர்சிக்கும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவிற்கு, திமுகவைக் குறை கூற எந்த தகுதியும்…
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களின் இ-கேஒய்சி (eKYC) சரிபார்ப்புப் பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்யும் நோக்கில், இன்று (செப்டம்பர் 19)…
அதிமுகவிலிருந்து விலகி மாற்று முகாமிற்குச் சென்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலா ரூ.35 கோடி வரை கொடுக்கப்பட்டதாக முன்னாள் பேரவைத் துணைத்…