அடுத்த பரபரப்பு..! மனைவி சொத்து விவரங்களை மறைத்தார் ஆதவ் அர்ஜுனா..? வேட்புமனுவை ரத்து செய்யக்கோரி சுயேச்சை வேட்பாளர் மனு..1!

Spread the love

வில்லிவாக்கம் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, தனது வேட்புமனுவில் மனைவியின் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகக் கூறி அவருக்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இத்தொகுதியின் சுயேச்சை வேட்பாளர் தேவராஜன் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி வேட்பாளர்கள் தங்களின் மற்றும் குடும்பத்தினரின் முழுமையான சொத்து விவரங்களை வெளிப்படுத்த வேண்டும் என்பது கட்டாயம் என்றும், ஆனால் ஆதவ் அர்ஜுனா திட்டமிட்டே உண்மைகளை மறைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த முறைகேடு தொடர்பாகத் தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மனுதாரர் வலியுறுத்தியுள்ளார். மேலும், ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனுவை ஏற்றுக்கொண்ட தேர்தல் அதிகாரியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும், விதிமீறல் உறுதி செய்யப்படும் பட்சத்தில் அவரது மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

“அடுத்த டார்கெட் ரெடி”…. வேலு, செந்தில் பாலாஜியைத் தொடர்ந்து இந்த திமுக அமைச்சருக்குக் குறி?… தவெக அரசின் அடுத்த அதிரடி…. அதிரும் தமிழக அரசியல் களம்….!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, அரசியல் களம் அப்படியே தலைகீழாக மாறியிருக்கிறது. தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம்…

3 minutes ago

விஜய் போட்ட கையெழுத்து… பின்னால் நடக்கும் ரகசிய டீலிங்… தவெகவை அதிரவைக்கும் அந்த ஒரு நபர்…!

தமிழ்நாட்டை போதையற்ற மாநிலமாக மாற்றுவோம் என்ற உறுதியான முழக்கத்துடன், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பல்வேறு…

5 minutes ago

BREAKING: “ராஜினாமா செய்ய மாட்டேன்” வைகோவின் உத்தரவை அதிரடியாக மறுத்த மதிமுக எம்.எல்.ஏ. இராசேந்திரன்… அரசியலில் திடீர் டுவிஸ்ட்..!!

திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கடையநல்லூர் தொகுதி மதிமுக எம்.எல்.ஏ. இராசேந்திரன், தனது பதவியை ராஜினாமா செய்ய…

28 minutes ago

என்னைக் காப்பாத்துங்க… அன்பு ஆபத்தாய் மாறிய விநோதம்… குரங்குகளுக்கு பழம் கொடுத்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் என்ன?… தூத்துக்குடியை உலுக்கிய மரணம்…!

தூத்துக்குடி மாவட்டத்தில் குரங்குகள் சூழ்ந்ததால் ஏற்பட்ட பதற்றத்தில், மலை உச்சியிலிருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சோக சம்பவம்…

29 minutes ago

பங்காளிகளின் வெறிச்செயல்..! நிலத்துக்காகப் பிறந்த உடன்பிறப்புகளைத் தீர்த்துக்கட்டிய உறவினர்கள்.. தருமபுரியை உலுக்கிய இரட்டைக் கொலை..!!

தருமபுரி அருகே தகடூர் நகரில் சொத்து தகராறு காரணமாக அக்கா மற்றும் தம்பி ஆகிய இருவர் கழுத்தறுத்து மிகக் கொடூரமான…

38 minutes ago

25 வயதிலேயே மாரடைப்பா?… ‘ஈஸ்ட்ரோஜன்’ தீர்ந்ததும் பெண்களுக்கு வரும் ஆபத்து… திடீரென மாரடைப்பு ஏற்பட்டால் பதறாமல் முதலில் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்…!

மாரடைப்பு என்பது உலக அளவில் மனித உயிர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு நோயாகும். இதய தசைகளுக்கு ரத்தத்தைக் கொண்டு…

46 minutes ago