தமிழகத்தில் கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக விஜய் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளாமல் இருந்தார். இதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 75 நாட்களுக்குப் பிறகு விஜய் இன்று புதுச்சேரியில் பொதுக்கூட்டத்தில் பேசி வருகின்றார். புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் நடத்தும் பொதுக்கூட்டத்திற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற விஜய் மக்கள் மத்தியில் உரையாற்றி வருகின்றார். ஒன்றிய அரசுக்கு தான் தமிழ்நாடு தனி, புதுச்சேரி தனி, ஆனால் நமக்கு இரண்டும் ஒன்றுதா
ன் என விஜய் தெரிவித்துள்ளார். புதுச்சேரி பிரச்சாரத்தில் பேசி வரும் அவர், நாம் அனைவரும் சொந்தங்கள் தான். உலகில் எந்த மூலையில் நமது வகையறா இருந்தாலும் அவர்கள் நம் உயிர்தான், உறவுகள் தான். தமிழ்நாட்டு மக்களைப் போல் புதுச்சேரி மக்களும் 30 வருடமாக என்னை தாங்கிப் பிடித்து வருகிறார்கள் என்று விஜய் பேசியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக்கழக மீது மறைமுக அரசியல் பழிவாங்கலை விட்டுவிட்டு தேர்தலில் நேரடியாக மோத முதல்வர் ஸ்டாலினுக்கு தில் இருக்கிறதா என ஆதவ் அர்ஜுனா சவால் விடுத்துள்ளார். புதுச்சேரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழகம் போலவே புதுச்சேரியிலும் நல்லதொரு மாற்றம் வருமா என மக்கள் ஆர்வமுடன் காத்திருப்பதாக கூறினார். அத்துடன் புதுச்சேரியிலும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் ஆட்சி விரைவில் மலரும் என சூளுரைத்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…
கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களும், கருத்து வேறுபாடுகளும் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளன. காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி,…
அரசியல் மாற்றங்கள் நிகழும்போது அரசுத் துறைகளிலும் அதன் தாக்கம் எதிரொலிப்பது வழக்கம் என்ற நிலையில், தற்போதைய தமிழக அரசியல் சூழலில்…
தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அவர்கள் மிக முக்கிய புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளார்…
அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் கட்சிமாற்ற விவகாரம் குறித்து, கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்கள்…