Categories: சினிமா

திருமணமாகி 13 வருடங்களுக்குப் பிறகு கர்ப்பமான நடிகை வித்யா பிரதீப்.. நிறைமாத வயிற்றுடன் பேபி பம்ப் போட்டோ ஷூட்..!

Spread the love

கேரளாவை சேர்ந்தவர் தான் நடிகை வித்யா பிரதீப். பயோ டெக்னாலஜி படிப்பில் முதுகலை பட்டம் பெற்ற இவர் தற்போது வெளிநாட்டில் மருத்துவத் துறையில் பணியாற்றி வருகின்றார்.

இவருக்கு சிறுவயதிலிருந்தே மாடல் மற்றும் நடிகையாக வேண்டும் என்பதுதான் கனவாக இருந்துள்ளது. அதனால் படிப்பிலும் கவனம் செலுத்தி கொண்டு நடிப்பிலும் சாதித்தார்.

இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குனர் மீரா கதிரவன் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் வெளியான அவள் பெயர் தமிழரசி என்ற திரைப்படத்தில் டான்சர் கதாபாத்திரத்தில் முதன்முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இந்தத் திரைப்படத்தில் தன்யா என்ற சிறு கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தாலும் இவருடைய நடிப்பு மற்றும் நடனம் பெரிதும் கவனிக்கப்பட்டது.

இந்த படத்திற்கு பிறகு இவர் ஹீரோயினியாக நடித்த திரைப்படம் தான் விருந்தாளி. இதில் மைக்கில் ஈஸ்வர் ஹீரோவாக நடித்திருந்த நிலையில் இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே ஹீரோவான மைக்கிலை காதலித்த பெற்றோர் சம்மதத்துடன் தன்னுடைய 18 வயதில் திருமணம் செய்து கொண்டார்.

மைக்கில் சில படங்கள் மட்டுமே நடித்த நிலையில் தற்போது புகைப்பட கலைஞராக இருந்து வருகின்றார். திருமணத்திற்குப் பிறகு தனது மனைவிக்கு உறுதுணையாக இருந்து அவரை பயோ டெக்னாலஜி முதுகலை பட்டம் வரை படிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல் ஒரு நடிகையாக இருப்பதற்கும் சுதந்திரம் கொடுத்தவர்.

இந்த நிலையில் வித்யா பிரதீப் சைவம் திரைப்படத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு பெயரை பெற்றார். அதனைப் போலவே சூர்யா நடிப்பில் வெளியான பசங்க 2 திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இவர் இதுவரை 35க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சன் டிவியில் நாயகி என்ற சீரியலிலும் இவர் கதாநாயகியாக நடித்திருந்த நிலையில் தற்போது திருமணம் ஆகி 13 ஆண்டுகளுக்குப் பிறகு வித்யா பிரதீப் கர்ப்பமாகியுள்ளார்.

இவருக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ள நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் வயிற்றுடன் கணவருடன் ரொமான்டிக் போட்டோ சூட் நடத்தியுள்ளார்.

அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

“‘என் மகனை உண்மையா காதலிச்சா செத்து போடி…” 17 வயது பள்ளி மாணவியை மிரட்டி தற்கொலைக்கு தூண்டிய கொடூர தாய்… வீட்டில் சிக்கிய CCTV ஆதாரம்…. பகீர் பின்னணி…!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்க்கேஜ் பகுதியில், 17 வயது பிளஸ் 2 பள்ளி மாணவி ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டிய குற்றத்திற்காக…

6 minutes ago

ஐயோ கொடுமையே… பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் புகுந்து… முன்னாள் ராணுவ வீரர், மகள் வெட்டிக்கொலை… சொத்துத் தகராறில் உறவினர்கள் வெறிச்செயல்… நடுங்க வைக்கும் சம்பவம்…!

கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் புகுந்த உறவினர்கள் சிலர், 67 வயதான முன்னாள் ராணுவ…

12 minutes ago

விநாயகர் சதுர்த்தி விழாவில் சோகம்…! சிலையை கரைக்க சென்ற 6 மாணவர்கள் அடுத்தடுத்து நீரில் மூழ்கி பலி…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள பட்டாஞ்செரு பகுதியில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலையை நீரில் கரைக்க செய்யச்…

13 minutes ago

திக் திக்… குழந்தையைத் தோளில் சுமந்த… நபர் மீது விழுந்த ராட்சத பாம்பு… அருவியில் உரைய வைக்கும் அதிர்ச்சி வீடியோ… மகாராஷ்டிராவில் அரங்கேறிய சம்பவம்…!

மகாராஷ்டிர மாநிலத்தின் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அம்போலி அருவியில் சுற்றுலா சென்ற குடும்பத்தினருக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது. தனது…

17 minutes ago

“எனக்கு அத்தை தான் வேணும்…” 5 பிள்ளைகளின் தாயுடன் காதல்… மாமியாருடன் ஓட்டம் பிடித்த மருமகன்…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் மைன்புரி சிட்டி கொத்வாலி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், 5 குழந்தைகளுக்குத் தாயான பெண் ஒருவர் தனது…

22 minutes ago