#image_title
உலகம் முழுவதும் பிரபலமான தஞ்சை பெரிய கோயில் சிற்பக் கலைக்கும் கட்டிடக்கலைக்கும் பெயர் போனது. ஆயிரம் ஆண்டுகளையும் தாண்டி கம்பீரமாக நிற்கிறது. இந்த தஞ்சை பெரிய கோவிலை கட்டியவர் தான் மாமன்னன் ராஜராஜ சோழன். மிகவும் வீரம் பொருந்திய பராக்கிரமம் பொருந்தியவர் தான் இந்த ராஜ ராஜ சோழன்.
சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்ததிலிருந்து ராஜராஜ சோழன் எவ்வளவு ஒரு மாமன்னராக திகழ்ந்திருக்கிறார் என்பது நம்மளால் புரிந்து கொள்ள முடியும். அப்படிப்பட்ட ராஜ ராஜ சோழன் பிறந்த தினத்தை தான் சதய விழாவாக விமர்சையாக தஞ்சை பெரிய கோவிலில் கொண்டாடுகிறார்கள்.
மாமன்னர் ராஜராஜசோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்தில் பிறந்திருக்கிறார் என்று கல்வெட்டுகள் மூலம் தெரிகிறது. இதனை முன்னிட்டு ஆண்டுதோறும் தஞ்சை மாவட்ட நிர்வாகம் ராஜராஜ சோழனின் பிறந்த நட்சத்திர தினத்தை சதய விழா என்ற பெயரில் இரண்டு தினங்களில் விழாவாக எடுத்து விமர்சையாக கொண்டாடுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இந்த ராஜராஜ சோழனின் சதய விழாவை அரசு விழாவாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி இந்த வருடம் மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா இன்று நவம்பர் 9ஆம் தேதி விமர்சையாக தொடங்கி இருக்கிறது. இன்றும் நாளையும் இந்த விழா நடைபெற இருக்கிறது .மாமன்னன் ராஜ ராஜா சோழனின் சதய விழா நிகழ்வை சிறப்பாக நடத்துவதற்கு தஞ்சை மாவட்ட நிர்வாகம் பல ஏற்பாடுகளை செய்திருக்கிறது.
இந்த ஆண்டு நடைபெறுவது 1039 வது சதய விழா ஆகும். அரசு சார்பாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பாகவும் இந்த ராஜராஜ சோழனின் சதய விழா மங்கள இசை கலை நிகழ்ச்சிகள் கருத்தரங்குகள் போன்றவற்றை கொண்டு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…
மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…
இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…
திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…