தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை திரிஷா. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதை தொடர்ந்து விஜய், அஜித், விக்ரம் என பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இடையில் இவரது கேரியர் கொஞ்சம் டல் ஆனது.
இதைத் தொடர்ந்து சமீபத்தில் இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் ஒரு சூப்பர் ரீ என்ட்ரி கொடுத்தார். இத்திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டது. பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆனது.
தற்பொழுது இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை திரிஷாவின் மார்க்கெட் எகிறியுள்ளது என்று கூறலாம். இந்நிலையில் நடிகை திரிஷா தற்பொழுது நடிகர் விஜயுடன் இணைந்து லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து நடிகர் அஜித் உடன் இணைந்து விடாமுயற்சி திரைப்படத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் திரிஷா தன்னுடைய லேட்டஸ்ட் பதிவுகளை அதில் வெளியிடுவார். அந்த வகையில் தற்போது மாலையும் கழுத்துமாக திருமண கோலத்தில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் திரிஷாவிற்கும் கல்யாணமா என கேட்க துவங்கிவிட்டனர். ஆனால், திரிஷாவின் திருமணம் அல்ல, அது நகை கடை விளம்பரம் என அதன்பின் தான் தெரியவந்தது.இதோ அந்த வீடியோ…
டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…
தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…
தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…
போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் ஜெம் வீரமணியிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பட்டினப்பாக்கம் போர்ஷோர் எஸ்டேட் பகுதியில் ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்திற்கு, உள்ளூர் மீனவ மக்களின்…