தமிழ் சினிமா ரசிகர்கள் ‘புன்னகை இளவரசி’ என்று கொண்டாடப்படுபவர் நடிகை சினேகா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். பல ரசிகர்களை கவர்ந்த இவர் தமிழ் திரையுலகில் ‘என்னவளே’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக இணைந்து நடித்த முன்னணி நடிகையாக உயர்ந்தார். சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து ‘அச்சம் உண்டு அச்சம் உண்டு’ திரைப்படத்தில் இணைந்து நடித்தனர். அப்பொழுது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது.
இதைத்தொடர்ந்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.இவர்களின் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன் பிறகு குடும்ப பொறுப்புகளில் கவனம் செலுத்த ஆரம்பித்த இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் நடுவராக இருந்து வருகிறார்.
அந்த வகையில் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இணையத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் அடிக்கடி போட்டோ சூட் எடுத்து அந்த புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து வருவார். நடிகை சினேகாவிற்கு ஒரு சகோதரி இருக்கிறார். இது அனைவருக்கும் தெரியும், அதனைப் போலவே கோவிந்த நாயுடு என்ற அண்ணனும் இருக்கிறார்.
அவர் முதலில் டான்ஸ் மாஸ்டர் கலாவை 1997 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு கத்தார் நாட்டில் செட்டிலானார். அதன் பிறகு சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் 1999 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர். பின்னர் கோவிந்த் இரண்டாவதாக சௌமியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர் ஒரு புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர் ஆவார். இந்த தம்பதிகளுக்கு தற்போது ஒரு மகனும் அக்ஷரா என்ற மகளும் இருக்கிறார்.
இன்று சினேஹாவின் அண்ணனான கோவிந்த் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகை சினேஹாவையும் அவருடைய குடும்பத்தையும் காணவில்லை. ஸ்னேஹாவின் சகோதரியும் மற்றும் கோவிந்த் அவர்களின் குடும்பத்தினர் மட்டுமே உள்ளனர். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று அக்கட்சியின்…
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…
தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…
சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…