#image_title
பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப் பெண் போலவே இருந்து 80‘களின் இளைஞர்களை மனதைக் கொள்ளை கொண்ட நடிகை தான் சித்தாரா. 1986 ஆம் ஆண்டு காவிரி என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் கதாநாயகியாக அறிமுகமானார் சித்தாரா. ஆனால் அவரை முன்னணி நடிகையாக்கியது கே பாலச்சந்தர் இயக்கிய புதுப்புது அர்த்தங்கள் திரைப்படம்தாம்.
இந்த படம் சூப்பர்ஹிட் ஆனது மட்டுமில்லாமல் சித்தாராவுக்கு தமிழ் சினிமாவில் நிலையான ஓர் இடத்தையும் கொடுத்தது. இப்படத்தின் பாடல்கள், கதை, நடிப்பு என அனைத்திலும் வெற்றி பெற்று பிளாக் பஸ்டர் படங்களில் ஒன்றாக அமைந்தது.
இதையடுத்து இவர் நடித்த புது வசந்தம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இந்த படத்தை யாராலும் மறக்க முடியாது. இயக்குநர் விக்ரமனின் முதல் படமான புதுவசந்தம் படத்திலேயே வலுவான கேரக்டரில் நடித்து ஹிட் கொடுத்தார். நான்கு ஆண்களுடன் வாழும் ஒரு பெண் நட்பாக பழகுவதை காதலர் சுரேஷ் தவறாகப் புரிந்து கொண்டு அவரை ஒதுக்கும் போது தன் இறுதியில் மீண்டும் நண்பர்களே போதும் என்ற முடிவுக்கு வருவது போல் அமைந்த இவரது கதாபாத்திரம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.
இப்படி தொடர்ந்து நடித்து வந்த சித்தாராவுக்கு ஒரு கட்டத்தில் மார்க்கெட் குறைந்தது. அதனால் அக்கா, அம்மா மற்றும அண்ணி போன்ற குணச்சித்திர வேடங்களில் நடிக்க வேண்டிய சூழலுக்கு ஆளானார். அப்படி ரஜினியின் படையப்பா படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார். முகவரி படத்தில் அஜித்துக்கு அண்ணியாக ரகுவரனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பின்னர் சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து காணாமல் போனார்.
தற்போது 50 வயதாகும் இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகத்தான் வசித்து வருகிறார். இதற்குக் காரணம் என்ன வென்று சினிமாவில் பல தரப்பில் இருந்தும் பல விதமான கருத்துகள் சொல்லப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சினிமா பத்திரிக்கையாளரான வித்தகன் ஒரு புதிய தகவலைப் பகிர்ந்துள்ளார்.
அதன் படி “சித்தாரா, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவரை காதலித்தாராம். அந்த நடிகரோடு சில படங்களில் இணைந்து நடித்துள்ளார். ஆனால் சித்தாரா காதலை சொல்லும்போது அந்த நடிகர் வேறொரு நடிகையுடன் காதலில் இருந்ததால் இவரை நிராகரித்துள்ளார். அதன் பின்னர் அந்த காதலை சித்தாராவும் மறந்துள்ளார். அதன் பிறகு தான் காதலித்த நடிகரோடேயே ஒரு படத்தில் ஜோடியாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது” எனக் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த வேளையில், உடல் நலனைப் பேணுவது மிகவும் அவசியமான ஒன்று. வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து…
ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா தனது கடற்படை பலத்தை அரபிக்கடலில்…
இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…