#image_title
தமிழ் திரையுலகில் முன்னணி பாடகியாக வலம் வந்தவர் தான் பாடகி சுசித்ரா. இவர் ரேடியோ மிர்ச்சியில் தொகுப்பாளராக பயணத்தை தொடங்கினார். இவர் பாடகி மட்டுமில்லை. ரேடியோ ஜாக்கி, நடிகை, பத்திரிக்கையாளர் எழுத்தாளர் எனப் பல முகங்கள் கொண்டவர். இவரும் நடிகர் கார்த்திக் குமாரும் சில ஆண்டுகளுக்கு முன்னர் பெற்றோரால் செய்து வைக்கப்பட்ட திருமண பந்தத்தில் இணைந்தனர். பாடகியாக நல்லபடியாக சென்று கொண்டிருண்ட சுசித்ராவின் வாழ்க்கையில் அடுத்தடுத்து பல சர்ச்சைகள் எழுந்தன.
2017 ஆம் ஆண்டு சுசித்ரா சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் பல முன்னணி நடிகர், நடிகைகளின் அந்தரங்க வீடியோக்கள் வெளியாகின. இதையெல்லாம் சுசித்ராதான் வெளியிட்டார் என்று சொல்லப்பட்டது. ஆனால் சுசித்ரா, தன்னுடைய கணவர் கார்த்திக் குமார்தான் தன்னுடைய டிவிட்டர் பாஸ்வேர்டை திருடி அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டார் என்று பகீர் குற்றச்சாட்டை வைத்தார்.
அதுமட்டுமில்லாமல் தனுஷ், த்ரிஷா, ஆண்ட்ரியா, சிம்பு மற்றும் வெங்கட்பிரபு என பல முன்னணி நடிகர் நடிகைகளைப் பற்றி பல பகீர் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் போதைக் கலாச்சாரம் தமிழ் சினிமாவில் வெகு இயல்பாக நடந்து கொண்டிருக்கிறது என கூறி பீதியைக் கிளப்பியுள்ளார்.
இந்நிலையில் சுசித்ராவின் இந்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் குறித்து நடிகை கஸ்தூரி ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். அதில் “சுசித்ரா பேசுவதே தேவையில்லாதது. அவரைப் பற்றி நான் இப்போது பேசுவது அதை விட தவறானது. அவரின் பேச்சுகளைப் பார்க்கும்போது அவரின் உள்ளம் சிதைந்து போயிருப்பது தெரிகிறது. அவருக்கு உண்மையிலேயே உதவி தேவைப்படுகிறது. ஆனால் அதற்கான இடம் கேமரா இல்லை.
நாம் கேட்பது எல்லாம் சுசித்ரா சொல்லும் ஒரு பக்கம் மட்டும்தான். அதை வைத்து நாம் தீர்ப்பெழுத முடியாது. அவங்க கார்த்திக்க திருமணம் செய்யும்போது அவங்க அப்பா அம்மா ரெண்டு பேரும் உயிரோட இல்ல. அவங்க அப்பா அம்மா ரெண்டு பேருமே தற்கொலை பண்ணிகிட்டவங்க. அதனால் அவங்களுக்குள்ள நிறைய குடும்ப போராட்டங்கள் இருந்துள்ளது.
கார்த்திக்க பத்தி அவங்க ஓரினச்சேர்க்கையாளர் குற்றச்சாட்ட வைக்குறாங்க… அத கண்டுபிடிக்க அவங்களுக்கு 13 வருஷம் ஆச்சா? எத்தனை நாளுக்கு அவங்க வெகுளியா இருந்திருப்பாங்க?. அவங்க சொல்றமாதிரி கார்த்திக் குமார் இவங்கள ஏமாத்திட்டார்னு வச்சிகிட்டாலாலும், இப்போ கார்த்திக் குமார் இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணி அவங்களோட சந்தோஷமா இருக்காங்களே… அவரோட ரெண்டாவது மனைவி கார்த்திக் குமாருக்கு ஆதரவா இருக்காங்களே?. அப்ப நாம எத நம்புறது” என பல அடுக்கடுக்கான கேள்விகளை சுசித்ரா மீது வைத்துள்ளார்.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…