Categories: சினிமா

“உன்மேல செம்ம பொறாமைல இருக்கேன்…” சுசித்ராவிடம் நேரடியாக சொன்ன அஜித்… காரணம் இதுதான்!

Spread the love

தமிழ் திரையுலகில் முன்னணி பாடகியாக  வலம் வந்தவர் தான் பாடகி சுசித்ரா. இவர் ரேடியோ மிர்ச்சியில் தொகுப்பாளராக பயணத்தை தொடங்கினார். இவரும் நடிகர் கார்த்திக் குமாரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். பாடகியாக நல்லபடியாக சென்று கொண்டிருண்ட சுசித்ராவின் வாழ்க்கையில் அடுத்தடுத்து பல சர்ச்சைகள் எழுந்தன.

2017 ஆம் ஆண்டு சுசித்ரா சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் பல முன்னணி நடிகர், நடிகைகளின் அந்தரங்க வீடியோக்கள் வெளியாகின. இதையெல்லாம் சுசித்ராதான் வெளியிட்டார் என்று சொல்லப்பட்டது. ஆனால் சுசித்ராவோ அந்த வீடியோக்களை நான் வெளியிடவில்லை. இன்னும் சொல்லப் போனால் அதில் இருக்கும் ஒரு வீடியோவைக் கூட நான் பார்த்தது இல்லை எனக் கூறி அதிர்ச்சியை கிளப்பினார்.

இப்போது அந்த புகைப்படங்கள தன்னுடைய பாஸ்வேர்ட்களை திருடி முன்னாள் கணவர் கார்த்திக் குமார்தான் வெளியிட்டார் எனக் கூறிவருகிறார். இந்நிலையில் இப்போது அவர் அடுத்தடுத்து பல யுடியூப் சேனல்களில் பேட்டிகொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களைப் பற்றி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். அதில் தற்போது அவர் அளித்துள்ள நேர்காணலில் போதை கலாச்சாரம் தமிழ் சினிமாவில் வெகு சாதாரணமாகிவிட்டது எனக் கூறியுள்ளார்.

அதில் அவர் அஜித் பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் “நாங்கள் தயாநிதி அழகிரியின் கல்யாண ரிசப்ஷன் பார்ட்டிக்கு  பாட்டு பாட சென்றிருந்தோம். அந்த பார்ட்டிக்கு அஜித்தும் வந்திருந்தார். விடிய விடியா நாங்கள் அந்தாக்‌ஷரி பாட அவர் ரசித்துக் கேட்டார். சில பாடல்களைக் கேட்டு அவர் அழுதே விட்டார்.

அவர் என்னிடம் நீ விஜய்க்காக பாடிய “ஒரு சின்னத்தாமரை” பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். அதுக்காக உன் மேல நான் செம்ம பொறாமைல இருக்கேன்.” என பாராட்டினார். அன்று விடிய விடிய அவர் எங்களோடு இருந்து விட்டு சென்றார்” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

வகுப்பறையா..? படுக்கை அறையா..? படுத்துக்கொண்டு ஹாயாக ரீல்ஸ் பார்க்கும் ஆசிரியை… அரசுப்பள்ளியில் நடந்த அதிர்ச்சி..!!

சமஸ்திபூர் மாவட்டம் சக் சாஹோ பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறையின் பின் வரிசை மேஜை மீது படுத்துக்கொண்டு ஆசிரியை…

8 minutes ago

அட்சய திருதியை 2026… தங்கம் வாங்குவதை விட பல மடங்கு பலன் தரும் ‘இந்த’ 3 பொருட்கள்… உடனே இத வாங்கி வைங்க…!

அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், "அட்சயம்" என்பதற்கு குறையாதது…

9 minutes ago

“மட்டன் வேகவே இல்லை” நண்பனின் முன் மனைவியை கேவலமாக திட்டிய கணவர்… மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு..!!!

யவத்மால் மாவட்டத்தின் ஆர்னி தாலுகாவில் உள்ள போர்கான் கிராமத்தில் வசித்து வந்த மனோஜ் என்பவர், தனது நண்பரை இரவு உணவிற்காக…

9 minutes ago

“கொலை செய்துவிட்டேன்” பிணத்தின் அருகே அமர்ந்து கதறல்… காம வெறிக்கு பலியான பாசம்..? ஹோட்டலில் மாமாவை துடிக்க துடிக்க சிதைத்த இளம்பெண்..!!!

ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் கேட்போர் நெஞ்சைப் பதற வைத்துள்ளது. தனது…

12 minutes ago

“முந்திரி தோப்பில் கொன்று புதைக்கப்பட்ட பெண்”… உல்லாசமாக இருந்த காதலன் செய்த கொடூரம்… நள்ளிரவில் நடந்த பயங்கரம்..!

புதுச்சேரி வில்லியனூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு, முந்திரி தோப்பில் புதைக்கப்பட்ட சம்பவம்…

19 minutes ago

ஷாக்கிங் வீடியோ: மகளுக்குப் பக்கத்தில் காதலன்.. ஆத்திரத்தில் கத்தியை உருவிய தந்தை! நடுநடுங்க வைத்த ஆணவத் தாக்குதல் முயற்சி..!!

கல்லூரி வளாகத்தில் கூட்டம் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த வரிசையில் தந்தை அமர்ந்திருக்க, அவருக்கு அடுத்த இருக்கையில் அவருடைய மகளும், மகளுக்கு…

19 minutes ago