தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருப்பவர் நடிகை சமந்தா. தன்னுடைய கடின உழைப்பை போட்டு சினிமாவில் முன்னேறி வந்த இவர் கடந்த சில வருடங்களாக மயோசிடிஸ் என்னும் நோயால் பாதிக்கப்பட்டு படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது மீண்டும் சினிமாவில் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார். இவர் நடிப்பில் கடந்த வருடம் சிட்டாடல் வெப் தொடர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.
இதனை தொடர்ந்து அடுத்தடுத்து வெப் தொடர்களில் நடித்து வருகிறார். தற்போது நடிப்பை தொடர்ந்து சொந்தமாக தயாரிப்பில் இறங்கி உள்ளார். அந்த வகையில் சுபம் என்ற படத்தை தயாரித்துள்ளார். இதற்கிடையில் இயக்குநர் ராஜ் நிடிமுரு என்பவரை இவர் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், சமந்தா தரப்பில் இருந்து இதுகுறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை வெளிவரவில்லை. இந்நிலையில் சமந்தா அளித்துள்ள பேட்டி ஒன்றில், “நான் இப்போது வெற்றியை சுந்தந்திரத்தின் அடிப்படையில் பார்க்கிறேன். 2 வருடமாக என் திரைப்படம் எதுவும் வெளியாகவில்லை.
வளர்ச்சி அடைவதும், முதிர்ச்சி அடைவதும் தான் சுதந்திரம். நான் முன்பு போல இப்போது வெற்றி பெறவில்லை என்று என்னை சுற்றி இருக்கிறவர்கள் நினைக்கலாம். யார் என்ன நினைத்தாலும் எனக்கு பரவாயில்லை. நான் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போதுதான் அதிகமாக் வெற்றி பெற்றிருப்பதாக நினைக்கிறன். ஒவ்வொரு நாளும் காலையில் நான் எழுந்திருக்கும்போது உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். ஏனென்றால் நான் செய்யும் பல வேலைகள் எனக்கு நிம்மதியை தருகிறது” என்று கூறியுள்ளார்.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…