தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சாய் பல்லவி. மலையாளத்து பைகிளியாக தமிழ் சினிமாவில் நுழைந்து இன்று ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார். இவர் இறுதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படத்தில் இந்து கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் இவருடைய நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டை பெற்றது. தற்போது அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் சாய்பல்லவி கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான மாரி 2 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இந்த படத்தில் இவர் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றார். நடிகர் தனுஷின் மாரி 2 திரைப்பட பாடலான ரவுடி பேபி பாடல் இன்றும் தனி இடத்தை பிடித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் தனுஷ் – தீ பாடிய இந்தப் பாடல் கடந்த 2019 ஆம் ஆண்டு youtubeல் பல சாதனைகளை முறியடித்து இருந்தது. 2015 ஆம் ஆண்டு வெளியாகி வசூலில் சக்கை போடு போட்ட மாரி படத்தின் இரண்டாம் பாகமாக பாலாஜி மோகன் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு மாரி 2 திரைப்படம் வெளியானது. முதல் பாகத்தின் இசையமைப்பாளரான அனிருத் இந்த படத்திலும் தனுசுடன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யுவன் சங்கர் இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டார்.
படத்தின் முதல் சிங்கிளாக 2018 அக்டோபர் 25ஆம் தேதி ரவுடி பேபி பாடல் வெளியானது. இந்த பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் 2019 ஜனவரியில் யூட்யூபில் வெளியான இந்த பாடல் தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய அளவில் பல சாதனைகளைப் படைத்தது. தென்னிந்திய அளவில் முதல் முறையாக யூடியூபில் 150 கோடி பார்வையாளர்களைக் கடந்த முதல் பாடல் என்ற சாதனையை ரவுடி பேபி பாடல் படைத்தது. பாடலின் ஒளிப்பதிவும் அதில் தனுஷ் மற்றும் சாய் பல்லவியின் நடனமும் வெகுவாக பாராட்டப்பட்டது. ரவுடி பேபி பாடல் ஷூட்டிங் நடைபெறுவதற்கு முன்னதாக பிரபுதேவா கொடுத்த நடன அசைவுகளை நான்கு நாட்களாக சாய் பல்லவி பயிற்சி செய்துள்ளார்.
பிறகு சூட்டிங் நடைபெற்ற நாளில் நடன அசைவுகளை முழுமையாக பயிற்சி எடுத்து நம்பிக்கையோடு வந்த நிலையில் அங்கு சில நடன அசைவுகளை பிரபுதேவா மாற்றி உள்ளார். ஏ காமாட்சி மீனாட்சி என்ற வரிகளின் போது தான் ஸ்டெப்பை பிரபுதேவா மாற்றி உள்ளார். அதில் சாய்பல்லவி இரண்டு மூன்று டேக்குகள் வாங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் நம்பிக்கையே இழந்த சாய் பல்லவி தன்னால் முடியுமா என்று நினைத்து அழுதுவிட்டார். பிறகு பிரபு தேவா அவரை சமாதானப்படுத்தி ஆடவைத்த நிலையில் இன்றளவும் சாய் பல்லவியின் சிறப்பான நடனம் இடம்பெற்ற பாடல்களில் ரவுடி பேபி பாடல் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…
திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…
தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…
திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…