Categories: சினிமா

19 வருட இடைவேளைக்குப் பிறகு அஜித்தின் சென்டிமென்ட் ஒர்க்அவுட் ஆகுமா.. ஏப்ரல் மாதத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து தல படங்கள்..?

Spread the love

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் அஜித் நடிப்பில் இறுதியாக விடாமுயற்சி திரைப்படம் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. சுமார் இரண்டு வருட இடைவேளைக்கு பிறகு ரசிகர்களை நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம் வெளியான நிலையில் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதனைத் தொடர்ந்து ஆதி ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் தான் குட் பேட் அக்லி.

அஜித்தின் தீவிர ரசிகரான ஆதித் ரவிச்சந்திரன் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் நீண்ட எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் பத்தாம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இதனிடையே அஜித்துக்கும் ஏப்ரல் மாதத்திற்கும் ஒரு இணைப்பு உள்ளது. அதாவது அஜித்தின் ஒரு சில திரைப்படங்கள் ஏப்ரல் மாதத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். அந்த வரிசையில் தான் தற்போது குட் பேட் அக்லி திரைப்படமும் இணைய காத்துள்ளது. இதனிடையே அஜித் நடிப்பில் ஏப்ரல் மாதத்தில் வெளியான திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ராசி:

1997 ஆம் ஆண்டு ஏப்ரல் 18ம் தேதி அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ராசி. இந்தத் திரைப்படத்தை முரளி அப்பாஸ் நடித்த நிலையில் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ரம்பா நடித்திருந்தார். எஸ் எஸ் சக்கரவர்த்தி தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படத்திற்கு சிற்பி இசையமைத்திருந்தார். இந்தத் திரைப்படம் தான் அஜித் சினிமா வாழ்க்கையில் முதன்முதலாக ஏப்ரல் மாதத்தில் வெளியான திரைப்படம். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ஓரளவு வெற்றி பெற்றது.

வாலி:

1999 ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வாலி. இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சிம்ரன், ஜோதிகா நடித்திருந்தனர். எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தை எஸ் எஸ் சக்கரவர்த்தி தயாரித்திருந்தார். இந்த திரைப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருந்த நிலையில் படம் blackbuster ஹிட் கொடுத்தது. அஜித்தின் சினிமா வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்றது என்று கூட கூறலாம். ஏப்ரல் மாதத்தில் வெளியான இந்த திரைப்படம் அஜித்துக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

திருப்பதி:

பேரரசு இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் திருப்பதி. இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சதா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். எம் எஸ் குகன் மற்றும் எம் சரவணன் ஆகியோர் சேர்ந்து தயாரித்திருந்த இந்த படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இறுதியாக அஜித் நடிப்பில் ஏப்ரல் மாதத்தில் இந்த திரைப்படம் தான் வெளியாகி இருந்தது.

இறுதியாக 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திருப்பதி திரைப்படம் வெளியாகி இருந்த நிலையில் சுமார் 19 வருட இடைவேளைக்குப் பிறகு தன்னுடைய ஏப்ரல் மாத செண்டிமெண்ட்டை அஜித்து கையில் எடுத்துள்ள நிலையில் ஏப்ரல் பத்தாம் தேதி குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். அஜித்தின் இந்த ஏப்ரல் மாத செண்டிமெண்ட் அவருக்கு கை கொடுக்குமா என்று காத்திருந்து பார்ப்போம்.

Nanthini

Recent Posts

டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு… 2,482 வங்கிப் பணியிடங்கள்… மாதம் ரூ 48,000 சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க…!

பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…

4 மணத்தியாலங்கள் ago

CM விஜய் தினமும் 20 மணிநேரம் வேலை செய்கிறார்… இணையத்தை கலக்கும் வைரல் பதிவு…!

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…

4 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளுக்கு ஜாக்பாட்… கடன் முழுவதும் தள்ளுபடி… தமிழக அரசு புதிய அறிவிப்பு…!

கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கடவுளே என்ன இது… ஒரே வெடிப்பு… அணுவெடியாய் மாறப்போகும் மினி கேஸ் கேனிஸ்டர்… கதறித் துடிக்கும் குடும்பம்… ஷாக்கிங் வீடியோ…!

மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ… மிஷினை விட்டு ஓடுங்க… நொடியில் ஆபத்தை உணர்ந்து… சக தொழிலாளர்களைக் காப்பாற்றிய ஊழியர்… அதிர்ச்சி வீடியோ…!

தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, ​​எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ என்னை விட்டுடுங்கடா… கதறிய வாலிபரை நடுரோட்டில்… இழுத்துச் சென்று இரும்புத் தடியால் அடித்து… சிறுநீர் கழித்த கொடூரம்… உ .பி – யில் அதிர்ச்சி சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…

5 மணத்தியாலங்கள் ago