Categories: சினிமா

நடிக்கிறது வருஷத்துக்கு ஒன்னு ரெண்டு படம் தான்.. ஆனா ரம்யா கிருஷ்ணன் மாத வருமானமே இத்தனை கோடியா…?

Spread the love

ரம்யா கிருஷ்ணன் இந்தியாவின் பிரபலமான நடிகை ஆவார். சென்னையில் பிறந்து வளர்ந்தவர் ரம்யா கிருஷ்ணன். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ரம்யா கிருஷ்ணன். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜ்யசபா சோ ராமசாமி அவர்களின் மருமகள் தான் ரம்யா கிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி ஆகியவற்றை முறையாக  கற்று  தேர்ந்தவர். 1985 ஆம் ஆண்டு வெள்ளை மனசு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரம்யா கிருஷ்ணன்.

பின்னர் ரஜினிகாந்தின் படிக்காதவன் கமல்ஹாசன் நடித்த பெயர் சொல்லும் பிள்ளை போன்ற தமிழ் திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்தார்  ரம்யா கிருஷ்ணன். ஆனாலும் 1980களில் இவர் தோல்வி நடிகையாகவே இருந்தார். எந்த ஒரு படமும் இவருக்கு கை கொடுக்கவே இல்லை. பிறகு 1999 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த படையப்பா திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தார் ரம்யா கிருஷ்ணன். இந்த படம் அவரது கேரியரில் திருப்புமுனையாக அமைந்தது என்றே சொல்லலாம். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது மட்டுமல்லாமல் ரம்யா கிருஷ்ணன் மிகப் பிரபலம் அடைந்தார். அதற்கு அடுத்ததாக சினிமாவில் ஏறு முகத்தையே கண்ட ரம்யா கிருஷ்ணன் பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார்.

அம்மன் கடவுள் வேடங்கள் இவருக்கு பொருத்தமாக இருந்ததால் ராஜகாளியம்மன் நாகேஸ்வரி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அன்னை காளிகாம்பாள் உள்ளிட்ட பல பக்தி திரைப்படங்களில் அம்மன் வேடங்களில் நடித்தார் ரம்யா கிருஷ்ணன். இதனால் பெண்களின் ஆதரவை பெற்றார். இது மட்டுமில்லாமல் சின்னத்திரை தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் இருந்திருக்கிறார் ரம்யா கிருஷ்ணன். சமீபத்தில் மாபெரும் வெற்றி பெற்ற பாகுபலி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமான ராஜ மாதா கதாபாத்திரத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமான ரம்யா கிருஷ்ணன் 2003 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்பட இயக்குன கிருஷ்ண வம்சியை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.

50 வயதைக் கடந்த ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் படங்கள் தற்போது குறைவு தான். வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இருந்தாலும் அவருடைய வருமானம் என்பது கோடிகளில் உள்ளது. அதாவது மாதம் ஐந்து கோடி வரை அவர் சம்பாதிப்பதாக கூறப்படுகிறது. கேரளாவில் ரம்யா கிருஷ்ணனுக்கு ஐந்து அழகு நிலையங்கள் உள்ள நிலையில் ஹைதராபாத்தில் மூன்று நகைகடைகள் உள்ளது. இவற்றின் மூலம் மாதம்தோறும் சுமார் ஐந்து கோடி வரை அவர் வருமானம் ஈட்டி வருகிறார். இந்த கணக்கின்படி ரம்யா கிருஷ்ணன் உடன் ஒப்பிடும்போது முன்னணி நடிகர்களின் வருமானம் என்பது குறைவாகத்தான் உள்ளது.
Nanthini

Recent Posts

டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு… 2,482 வங்கிப் பணியிடங்கள்… மாதம் ரூ 48,000 சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க…!

பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…

6 மணத்தியாலங்கள் ago

CM விஜய் தினமும் 20 மணிநேரம் வேலை செய்கிறார்… இணையத்தை கலக்கும் வைரல் பதிவு…!

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…

6 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளுக்கு ஜாக்பாட்… கடன் முழுவதும் தள்ளுபடி… தமிழக அரசு புதிய அறிவிப்பு…!

கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கடவுளே என்ன இது… ஒரே வெடிப்பு… அணுவெடியாய் மாறப்போகும் மினி கேஸ் கேனிஸ்டர்… கதறித் துடிக்கும் குடும்பம்… ஷாக்கிங் வீடியோ…!

மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… மிஷினை விட்டு ஓடுங்க… நொடியில் ஆபத்தை உணர்ந்து… சக தொழிலாளர்களைக் காப்பாற்றிய ஊழியர்… அதிர்ச்சி வீடியோ…!

தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, ​​எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ என்னை விட்டுடுங்கடா… கதறிய வாலிபரை நடுரோட்டில்… இழுத்துச் சென்று இரும்புத் தடியால் அடித்து… சிறுநீர் கழித்த கொடூரம்… உ .பி – யில் அதிர்ச்சி சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…

8 மணத்தியாலங்கள் ago