நடிக்கிறது வருஷத்துக்கு ஒன்னு ரெண்டு படம் தான்.. ஆனா ரம்யா கிருஷ்ணன் மாத வருமானமே இத்தனை கோடியா…?

By Nanthini on மாசி 13, 2025

Spread the love

ரம்யா கிருஷ்ணன் இந்தியாவின் பிரபலமான நடிகை ஆவார். சென்னையில் பிறந்து வளர்ந்தவர் ரம்யா கிருஷ்ணன். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ரம்யா கிருஷ்ணன். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜ்யசபா சோ ராமசாமி அவர்களின் மருமகள் தான் ரம்யா கிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி ஆகியவற்றை முறையாக  கற்று  தேர்ந்தவர். 1985 ஆம் ஆண்டு வெள்ளை மனசு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரம்யா கிருஷ்ணன்.

13 வயதில் ஹீரோயின்.. ரஜினி, கமலை தன்னுடைய நடிப்பால் மிரள வைத்த இந்த 53 வயது  நடிகை யார் தெரியுமா? - Actress Ramya Krishnan nostalgic Childhood photo  viral in internet - Asianet News Tamil

   

பின்னர் ரஜினிகாந்தின் படிக்காதவன் கமல்ஹாசன் நடித்த பெயர் சொல்லும் பிள்ளை போன்ற தமிழ் திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்தார்  ரம்யா கிருஷ்ணன். ஆனாலும் 1980களில் இவர் தோல்வி நடிகையாகவே இருந்தார். எந்த ஒரு படமும் இவருக்கு கை கொடுக்கவே இல்லை. பிறகு 1999 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த படையப்பா திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தார் ரம்யா கிருஷ்ணன். இந்த படம் அவரது கேரியரில் திருப்புமுனையாக அமைந்தது என்றே சொல்லலாம். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது மட்டுமல்லாமல் ரம்யா கிருஷ்ணன் மிகப் பிரபலம் அடைந்தார். அதற்கு அடுத்ததாக சினிமாவில் ஏறு முகத்தையே கண்ட ரம்யா கிருஷ்ணன் பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார்.

   

Actress Ramya Krishnan Birthday Special Photos | 'வயசானாலும் அழகு ஸ்டைலும்  உன்ன விட்டு போகல' ரம்யா கிருஷ்ணனின் கலக்கல் புகைப்படங்கள் | News in Tamil

 

அம்மன் கடவுள் வேடங்கள் இவருக்கு பொருத்தமாக இருந்ததால் ராஜகாளியம்மன் நாகேஸ்வரி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அன்னை காளிகாம்பாள் உள்ளிட்ட பல பக்தி திரைப்படங்களில் அம்மன் வேடங்களில் நடித்தார் ரம்யா கிருஷ்ணன். இதனால் பெண்களின் ஆதரவை பெற்றார். இது மட்டுமில்லாமல் சின்னத்திரை தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் இருந்திருக்கிறார் ரம்யா கிருஷ்ணன். சமீபத்தில் மாபெரும் வெற்றி பெற்ற பாகுபலி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமான ராஜ மாதா கதாபாத்திரத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமான ரம்யா கிருஷ்ணன் 2003 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்பட இயக்குன கிருஷ்ண வம்சியை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.

Ramya Krishnan : வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன் !! நடிகை ரம்யா  கிருஷ்ணன் பிறந்தநாள் இன்று ! | Samayam Tamil

50 வயதைக் கடந்த ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் படங்கள் தற்போது குறைவு தான். வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இருந்தாலும் அவருடைய வருமானம் என்பது கோடிகளில் உள்ளது. அதாவது மாதம் ஐந்து கோடி வரை அவர் சம்பாதிப்பதாக கூறப்படுகிறது. கேரளாவில் ரம்யா கிருஷ்ணனுக்கு ஐந்து அழகு நிலையங்கள் உள்ள நிலையில் ஹைதராபாத்தில் மூன்று நகைகடைகள் உள்ளது. இவற்றின் மூலம் மாதம்தோறும் சுமார் ஐந்து கோடி வரை அவர் வருமானம் ஈட்டி வருகிறார். இந்த கணக்கின்படி ரம்யா கிருஷ்ணன் உடன் ஒப்பிடும்போது முன்னணி நடிகர்களின் வருமானம் என்பது குறைவாகத்தான் உள்ளது.