ஒரு நாடகத்தத் தடை பண்ணா எம் ஆர் ராதா என்ன பண்ணுவார் தெரியுமா?… மனுஷன் எல்லார் கண்ணுலயும் விரல விட்டு ஆட்டிருக்காரே!

By vinoth on மாசி 13, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் தனக்கு முன்னோடி இல்லாத நடிகர்களில் ஒருவர் எம் ஆர் ராதா. தன்னுடைய தனித்துவமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர். மேடை நாடகத்தில் முடி சூடா மன்னனாக விளங்கியவர். 1930 மற்றும் 40 களிலேயே சில படங்களில் நடித்தாலும், நாடகம் அளவுக்கு அவருக்கு சினிமா பிடிக்கவில்லை. அதனால் நாடகங்களிலேயே கவனம் செலுத்தினார்.

அதன் பிறகு பத்தாண்டுகளுக்குப் பிறகு 1954 ஆம் ஆண்டு ரத்தக் கண்ணீர் திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதன் பின்னர் அவருக்கு குணச்சித்திர நடிகராக மிகப்பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த படம் என்றால் அது சிவாஜியோடு அவர் இணைந்து நடித்த ‘பாகப்பிரிவினை’ திரைப்படம்தான். அந்த படத்தில் சிங்கபூரான் என்ற வேடத்தில் கலக்கி இருப்பார் ராதா. ராதாவை நம் படத்தில் போட்டால் அவரே நகைச்சுவை மற்றும் வில்லத்தனம் என இரண்டையும் பார்த்துக்கொள்வார் என அவரை எல்லா படத்திலும் புக் பண்ண ஆரம்பித்தனர்.

   

எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி ஆகிய இருவரும் தமிழ் சினிமாவில் இருபெரும் நடிகர்களாக உருவாகி வந்த காலத்தில் கூட அவர்களுக்காக பணிந்து போகாதவர் எம் ஆர் ராதா. இருவரும அவரை மரியாதையோடு “அண்ணே” என்றுதான் அழைப்பார்கள்.

   

 

சினிமாவுக்கு வந்த பின்னரும் எம் ஆர் ராதா தொடர்ந்து நாடகங்களில் ஆர்வம் காட்டிக் கொண்டிருந்தார். அவர் நாடகங்களில் முற்போக்கான கருத்துகள் இருந்ததால் அப்பொதைய சென்ஸார் அதிகாரிகள் அடிக்கடி அவர் நாடகங்களுக்குத் தடை விதித்துள்ளனர். ஆனால் அதைப் பற்றியெலாம் கவலைப்படாமல் வேறொரு நாடகத்தின் கதைப்பிரதியைக் கொடுத்து அனுமதி பெறுவாராம்.

ஆனால் நாடகம் அரங்கேறும் போது சில பேர்களையும் வசனங்களையும் இணைத்து எப்படியோ தனது பழைய நாடகத்தில் என்ன சொல்ல வந்தாரோ அதையே செய்துவிடுவாராம். இப்படி பலமுறை தனது நாடகங்களை நடத்தியுள்ளாராம் எம் ஆர் ராதா.