Connect with us

CINEMA

குடும்பத்தோடு ஜாலியாக கிறிஸ்துமஸ் கொண்டாடும் நடிகை ரம்பா!…. வாவ் சூப்பரா இருக்கே!… வைரலாகும் வீடியோ இதோ!…

நடிகை ரம்பா தனது குடும்பத்துடன் இணைந்து ஜாலியாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ரம்பா. இவர் ஈ.வி.வி.சத்யநாராயணா இயக்கிய 1993-ஆம் ஆண்டு வெளியான ‘ஆ ஒக்கடு அடக்கு’ என்ற தெலுங்குப் படத்தின் மூலமாகவே திரையுலகில் கால் பதித்திருந்தார். இவர் திரையுலகை விட்டு விலகி இருந்தாலும் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் அதே பிரபலத்துடன் தான் காணப்படுகிறார்.

   

நடிகை ரம்பா ‘சுந்தர புருஷன்’ படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இவர் நடித்த ”உள்ளத்தை அள்ளித்தா” திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. இதை தொடர்ந்து அவர் செங்கோட்டை, அருணாச்சலம், ராசி, விஐபி, நினைத்தேன் வந்தாய், காதலா காதலா, மின்சார கண்ணா, ஆனந்தம் உட்பட பல ஹிட் படங்களிள் நடித்துள்ளார்.

தெலுங்கு மற்றும் ஹிந்தி, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். ரம்பாவுக்கும் கனடாவை சேர்ந்த இந்திரகுமார் பத்மநாதனுக்கும் 2010ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். திருமணத்தை தொடர்ந்து திரையுலகில் இருந்து விலகிய இவர் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர். இவர் அவ்வப்போது தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களும் வீடியோக்களையும் இணையத்தில் பதிவு செய்து வருகிறார். இவர் தற்பொழுது கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு  குடும்பத்துடன் இணைந்து கொண்டாடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்பொழுது படுவைரலாகி  வருகின்றது.

இதோ அந்த வீடியோ…..

 

View this post on Instagram

 

A post shared by RambhaIndrakumar???? (@rambhaindran_)

Continue Reading

More in CINEMA

To Top