சின்னத்திரையில் நடிகர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்வது ஒன்றும் புதிதல்ல. ஆனால் ஒரு சில நடிகர்கள் மட்டும்தான் வாழ்க்கை பயணத்தில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கின்றனர். சிலருடைய வாழ்க்கை ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக பலரும் மெச்சும் வகையில் இருந்தாலும் டக்கென்று அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அவர்களுடைய வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்பட்டு விடுகிறது.
அந்த மாதிரி தான் சின்னத்திரையில் ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகை ரக்ஷிதா மற்றும் அவருடைய கணவர் தினேஷ் கார்த்திக் வாழ்க்கையும் தற்பொழுது இருந்து வருகிறது. ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற முதல் சீரியலில் ஒன்றாக நடித்த இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுடைய வாழ்க்கையில் யார் கண்ணுபட்டதோ என்று தெரியவில்லை. இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனித்தனியாக தற்பொழுது வாழ்ந்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து ரக்ஷிதா மகாலட்சுமி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தபோது ரட்சிதாவிற்கு அதிகமான சப்போர்ட் கொடுத்திருந்தார்.
முதல் நாளில் தொடங்கி கடைசி நாள் வரைக்கும் ரச்சிதாவிற்காக ஒவ்வொரு நாளும் தன்னுடைய ஓட்டு அளித்து ஆதரவு கொடுத்து வந்தார் தினேஷ். ஆனாலும் தற்பொழுது வரை அவரது மனம் மாறவில்லை.
இந்நிலையில் தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்தது கொண்டுள்ளார் தினேஷ். தினேஷ் எவ்வளவு தான் கெஞ்சினாலும் ரக்ஷிதா தனது விவாகரத்து முடிவில் தெளிவாக இருக்கிறார். தற்பொழுது பலரும் பார்த்திடாத இவர்களின் திருமண வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
https://www.youtube.com/watch?v=Hlj1podyDtA